For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை vs ஹைதராபாத் போட்டியில் சந்தேக 'சம்பவங்கள்..' மேட்ச் ஃபிக்சிங்.. வைரலாகும் மீம்ஸ்

Google Oneindia Tamil News

துபாய்: அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையேயான போட்டி ஃபிக்சிங் செய்யப்பட்டது எனக் கூறி கிண்டல் செய்து மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகின்றன.

Recommended Video

    MI vs SRH போட்டியில் சர்ச்சையை கிளப்பிய Pollard Wicket.. உண்மை என்ன?

    நேற்றைய போட்டியில் பெரும் ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். அப்போதுதான் பிளே ஆப் போக முடியும் என்ற இக்கட்டான நிலையில் களம் கண்டது மும்பை.

    முதலில் பேட் செய்த அந்த அணி வீரர் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முறையே, 32 பந்துகளில் 84, 40 பந்துகளில் 82 ரன்களை குவித்து அதிரடி காட்டினர். ஒரு கட்டத்தில் ஸ்கோர் 250ஐத் தாண்டும் என்ற நிலை இருந்தது.

    ஐபிஎல் 2021: RCB Vs SRH -விராட் கோலியின் கனவைக் கலைத்த புவனேஸ்வர், மாலிக்ஐபிஎல் 2021: RCB Vs SRH -விராட் கோலியின் கனவைக் கலைத்த புவனேஸ்வர், மாலிக்

    சர்ச்சையான பொல்லார்ட் எல்பிடபிள்யூ

    சர்ச்சையான பொல்லார்ட் எல்பிடபிள்யூ

    இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை அந்த அணி எடுத்தது. ஆனால், பொலார்ட் எல்பிடபிள்யூ ஆனபோது கள நடுவர் அவுட் கொடுத்தார், ஆனால் மூன்றாம் நடுவர், அதை அவுட் இல்லை எனக் கூறினார். பந்து ஸ்டம்பில் படாமல் மேலே போய்விட வாய்ப்பு இருக்கிறது என 3வது நடுவர் அறிவித்தார். ஸ்டம்புக்கு முன்னால் நின்றபடி அதுவும் பேக்ஃபுட் சென்று பந்து வழக்கமாக பின்னங்காலில் பட்டால் கண்டிப்பாக அது எல்பிடபிள்யூதான். ஆனால் பொல்லார்ட் விஷயத்தில் பந்து உயரமாக போய்விடும் என்று கணித்து அறிவித்தார் நடுவர்.

    ஆரம்பித்த மீம்ஸ்

    ஆரம்பித்த மீம்ஸ்

    இத்தனைக்கும் பந்து வீசிய சித்தார்த் கவுல் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை போல பெரிய உயரமும் கிடையாது. இதனால் போட்டி பிக்சிங் செய்யப்பட்டுள்ளது என மீம்ஸ் கிளம்ப தொடங்கின. ஹைதராபாத் வீரர்கள் பலரும் கைக்கு வந்த பந்துகளை மிஸ் செய்தது, ஃபீல்டிங்கில் மிஸ் செய்தது, அளவுக்கு அதிகமாக பவுலர்கள் ஒயிடு வீசியது, ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன், முன்னணி பவுலர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நேற்று களமிறங்காதது, சிறப்பாக பந்து வீசி ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அபிஷேக்கிற்கு மீண்டும் ஓவர் தரப்படாதது என பல விஷயங்களை முன் வைத்து போட்டி மும்பைக்கு ஆதரவாக பிக்ஸ் செய்யப்பட்டதாக மீம்ஸ் பரவின. இதோ சில உங்களுக்காக..

    மும்பை அணி வீரர்களோடு நடுவர்

    மும்பை அணி வீரர்களோடு நடுவர்

    மும்பை அணி வீரர்கள் ஆட்டத்திற்கு தயாராகும் முன்பாக கட்டிப்பிடித்துக் கொள்ளும்போது, நடுவரும் சேர்ந்து கட்டிப்பிடித்திருப்பார் போல. போட்டி அப்படிதான் இருக்கிறது என்கிறது இந்த மீம்.

    அபிஷேக் ஓவர்

    அபிஷேக் ஓவர்

    ஒருவர் வீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்ரவுண்டர் அபிஷேக் ஷர்மாவிற்கு பிறகு ஏன் ஓவர் தரப்படவில்லை. ரன்களை வாரிக் கொடுத்தவர்களுக்கு ஓவர்கள் கொடுக்கப்பட்டதே என்று சொல்கிறது இந்த மீம்.

    என்னா பணம்

    என்னா பணம்

    ஹைதராபாத் வீரர்கள் இவ்வளவு பெரிய மூட்டையில் பணத்தோடு கிளம்பியிருப்பார்கள் போல என கிண்டல் செய்கிறது இந்த மீம்.

    English summary
    SRH vs MI: Memes have been circulating virally on social media, claiming that the match between Mumbai Indians and Sunrisers Hyderabad at the Abu Dhabi Stadium yesterday was fixed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X