கடைசில நமக்கே இப்டி ஒரு டே வச்சிட்டாங்களே.. வாழ்த்து சொல்லவே சோம்பேறித்தனமா இருக்கே!
சென்னை: தேசிய சோம்பேறிகள் தினத்தை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சோம்பேறிகள் தினம் என ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒரு தினம் கொண்டாடப்படுவதே நம்மில் பலருக்குத் தெரியாது. அதற்குக் காரணம், மற்ற சிறப்புத் தினங்களைப் போல் அதற்கு யாரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து, அதனை சோம்பேறிகள் சோம்பேறித்தனமாக படிக்காமல் விட்டு விட்டால் என்ன செய்வது என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.
ஆனாலும் நம் மீமர்கள் விடுவதாய் இல்லை. வழக்கம் போல் இந்த சோம்பேறிகள் தினத்தையும் சிறப்பாக மீம்ஸ் போட்டுக் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளங்களில் பகிரப்படும் சோம்பேறிகள் தின மீம்ஸில் பல கடந்த சில ஆண்டுகளாகவே பகிரப்பட்டு வரும் பழைய மீம்ஸ்கள்தான். புது மீம்ஸ்களை உருவாக்க சோம்பேறித்தனம் போல...
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில சோம்பேறிகள் தின மீம்ஸ்கள் உங்களுக்காக...























Click it and Unblock the Notifications