ஜம்ப் அடிச்ச நாஞ்சில் சம்பத்... நெட்டிசன்கள் வச்சு செய்றாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், வெள்ளப்பிரச்சினை பற்றி பேசப்போய், பதவியிழந்தார். பின்னர் செய்தி தொடர்பாளரானார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சில நாட்கள் ஒதுங்கியிருந்த சம்பத், மீண்டும் லைம் லைட்டுக்கு வந்தார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறினார். சசிகலாவை பார்த்ததில்லை என்று கூறினார். சசிகலாவிற்கு தகுதியிருக்கிறதா என்றும் கேட்டார்.

ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை ஒப்படைத்த சம்பத், அரசியலை விட்டே ஒதுங்கப் போவதாகவும் கூறினார். பின்னர் என்ன நினைத்தாரோ போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டி அடடே ரகம்.

சசிகலாவிற்கு அனைத்து வித தகுதிகளும் இருக்கிறது. அவரை சந்தித்த உடன் சுதந்திரமாக உணர்ந்தேன் என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார். விடுவார்களா? நெட்டிசன்கள், கடந்த ஒரு வாரமாக வச்சு செய்கிறார்கள். சிலவற்றை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

கார் சர்வீஸ்

கார் சாவியை கொடுத்ததே சர்வீஸ் விடத்தான் என்பது இந்த வலைஞரின் கருத்து.

சுதந்திரம்

சுதந்திரம் கிடைத்ததே சின்னம்மாவினால்தான் என்று கூறாமல் விட்டாரே என்பது இவரது கருத்து.

பொங்கல் போனஸ்

பொங்கல் போனஸ் வாங்கிய மகிழ்ச்சியில் இப்படி பொங்குகிறார் சம்பத் என்பது இந்த நெட்டிசனின் பதிவு

இதுல என்ன பெருமை

நான் விமர்ச்சித்த பிறகும் சசிகலா என்னை சந்திக்க நினைத்ததே நான் பெற்ற பேறு என்று கூறிய சம்பத்திற்காகவே இந்த பதிவு. இந்த டுவிட்டுகளை எல்லாம் அவர் படித்தாரா? தெரியலையே.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens are trolling Nanjil Sampath in social media on his return to ADMK.
Please Wait while comments are loading...