கட்சிக்காக உசுர கொடுத்து போராடலாம், இடுப்ப குடுத்து போராடனும்னா எப்படி?... #இடுப்புகிள்ளிதிமுக
கரூர் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்ணின் இடுப்பை கிள்ளியதாக செய்தி வெளியானதையடுத்து ட்விட்டரில் இடுப்புகிள்ளி திமுக ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஷ்டேகில் பதிவிடப்பட்டுள்ள சில சுவாரஸ்யமான
Recommended Video

சென்னை : கரூர் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண் போராட்டத்தில் ஈடுபட்ட போது தனது இடுப்பை கிள்ளிவிட்டதாக புகார் கூறினார். செய்தி ஊடகங்களில் வெளியான இந்த செய்தியை வைத்து அந்தக் கட்சியினரை சமூக வலைதளங்களில் பிரித்து மேய்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கன்டென்ட் கிடைக்காமல் இருந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் இந்த விஷயத்தை வைத்து ட்ரோல்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்க கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவர் சென்னை வந்திருந்தார்.
அப்போது ஒரு நிர்வாகி தனது இடுப்பை கிள்ளிவிட்டதாக புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து புகார் தெரிவித்த தனது கணவரும் மிரட்டப்பட்டதாக ஜெயமணி கூறி இருந்தார். இந்நிலையில் ஜெயமணியின் இந்த குற்றச்சாட்டை வைத்தே இடுப்புகிள்ளி திமுக என்ற ஹேஷ்டேக் போட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர் சிலர். அவற்றில் சில சுவாரஸ்யமான ட்வீட்கள் இதோ:
|
தளபதின்னாலே இடுப்பால பிரச்னை
தளபதின்னாலே இடுப்பு விஷயத்துல பிரச்னைதானோன்னு கேட்டுள்ளார் இந்த வலைபதிவர். 2000ம் ஆண்டில் தளபதி விஜய் குஷி படத்தில் இடுப்பு விஷயத்தால பிரச்னைல மாட்டுனாரு, 2018ல அதே மாதிரி ஒரு இடுப்பு கிள்ளி மேட்டர் தளபதி ஸ்டாலினுக்கு பிரச்னையா அமைஞ்சிடுச்சே என்று கேட்டுள்ளார் இவர்.
|
கட்சிக்காக இப்படி போராடனுமா
பாட்ஷா படத்தை என்னமா மேட்ச் பண்ணிருக்காரு இந்த வலைபதிவர். காலேஜ் போய் படிக்கலாம் கெஸ்ட் ஹவுஸ் போய் படிக்கனும்னா எப்படின்னு ரஜினிகிட்ட யுவராணி கேட்டுகுற டயலாக்கை அப்படியே திருப்பி போட்ருக்காருப்பா இவரு. கட்சிக்காக உசுர குடுத்து போராடலாம்னா, இடுப்ப குடுத்து தான் போராடனும்னா எப்படிண்ணா? என்று கேட்பது போல மீம் போட்டுள்ளார்.
|
இடுப்புகிள்ளியில் 2 லெவல்
இடுப்பு கிள்ளி மேட்டரை வைத்து இந்த வலைபதிவர் ரகம் பிரித்துள்ளார். ஜுனியர் லெவல் ஆட்கள் ஆண்களின் இடுப்பை கிள்ளுவார்கள், சீனியர் லெவல் ஆட்கள் பெண்களின் இடுப்பை கிள்ளுவார்கள் என்று கேலி செய்துள்ளார் இவர்.
|
என்னா ஒப்பீடுப்பா...
வின்னர் படத்தில் வடிவேலு வலிய போய் கதாநாயகியிடம் வம்பிழுக்கும் காட்சியை பதிவிட்டுள்ளார் இவர். வீடியோவும் இடுப்புகிள்ளி சம்பவமும் மேட்ச் ஆகுதா பாருங்க மக்களே.
|
மகளிரணிக்கு புதிய சீருடை
பெண்ணின் இடுப்பை கிள்ளி அவமானப்படுத்தியதால் இனி அந்தக் கட்சிப் பெண்களுக்கு புதிய சீருடை என்று இந்த பதிவை போட்டுள்ளார் இந்த நெட்டிசன். இடுப்பே தெரியாமல் முழுவதும் கவர் செய்யப்பட்டிருக்கும் படத்தை போட்டு அவர் இவ்வாறு கிண்டல் செய்துள்ளார்.
|
திமுக யாருக்காக போராடும்
கிருஷ்ணா, பாலாறு, தாமிரபரணினா திமுக போராட்டாம் செய்யாது. காவேரி, கங்கா, யமுனானா போராட்டம் செய்யும்.
புரிஞ்சவன் தான் பிஸ்தா என்று போட்டுள்ளார் இவர்.












Click it and Unblock the Notifications