வீடா இது.. கார்ப்பரேஷன் குப்பைத்தொட்டி மாதிரி இருக்கு.. இத பொங்கலுக்கு க்ளீன் வேற பண்ணனுமாம்!
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகளை சுத்தம் செய்வதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொங்கல் பண்டிகை வருகிறதென்றாலே வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையையும் மக்கள் ஆரம்பித்து விடுவார்கள். வீட்டை சுத்தப் படுத்தி, வெள்ளையடித்து, பழைய பொருட்களை ஒழித்து, பரணில் இருக்கும் பொருட்களை தூசி தட்டி என வீட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.

அதுவும் இந்த முறை பொங்கலுக்கு முன்னதாக சனிக்கிழமை விடுமுறை கூடுதலாக வருவதால், அந்தக் கிழமையை சுத்தப் படுத்துவதற்கென்றே பல வீடுகளில் இப்போதே ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறதே என ஆசையாய் இருந்தவர்கள், இப்போதே மீம்ஸ் போட்டு புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
வீட்டைச் சுத்தப்படுத்துவதை வைத்து ஒரு குரூப் மீம்ஸ் பகிர்ந்து வருகிறதென்றால், மறுபுறம், 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற நம்பிக்கையோடு மற்றொரு குரூப் நம்பிக்கை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில பொங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications