Memes: "மனுசன நிம்மதியா ஒரு பாப்கார்ன் திங்கவிடுறாங்களா?" தெறிக்கும் ஜிஎஸ்டி மீம்ஸ்!
சென்னை: பாப்கார்னுக்கு வகை வாரியாக பிரித்து ஜிஎஸ்டி வரி போடப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது. ஸ்வீட் கேரமல் பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 55வது கூட்டம் இன்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சுவையூட்டப்பட்ட பாப்கார்ன், பழைய கார் விற்பனை வரி உயர்வு உள்ளிட்ட பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கூடிய பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும், பேக் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கேரமல் பாப்கார்னுக்கு 18% வரி விதிக்கப்படும் என்றும் இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை அமல்படுத்தும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தற்போது அமலில் இருக்கிறது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்றாலும், ஒவ்வொரு பொருளிலும், இவ்வாறு வேறு வேறாக வகை பிரித்து ஜிஎஸ்டி விதிக்கப்படுவது குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
பாப்கார்ன் ஜிஎஸ்டி மீம்ஸ்
அண்மையில் இப்படித்தான் கிரீம் பன்னுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி முறை, பெரியளவில் விவாதங்களைக் கிளப்பி இருந்தது. இந்நிலையில், பாப்கார்ன் ஜிஎஸ்டி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் உலவும் சில மீம்களை பார்க்கலாம்.
எவ்வளவு சோதனை!
இண்டர்வெல்ல பாப்கார்ன் வாங்க வரிசையில நிக்கும்போது எந்த வெரைட்டிக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரின்னு வேற கால்குலேட் பண்ணணுமா?
மனுசன நிம்மதியா ஒரு பாப்கார்ன் திங்கவிடுறாங்களா? எவ்வளவு சோதனை!!

--
புதுசா இருக்குணே
லூஸ் பப்கார்ன் 5%, பேக் செய்த பாப்கார்ன் 12%, கேரமல் பாப்கார்னுக்கு 18% ஜி.எஸ்.டி வரி விதிப்பு.
பாப்கார்ன ஏன் 3 வகையா பிரிக்கிறீங்க? எல்லாமே ஒண்ணுதானே அதை ஏன் பிரிக்கிறீங்க? புதுசா இருக்குண்ணே.. புதுசா இருக்கு..
#GSTatPopcorn

--
நேத்து கேரமல் பாப்கார்ன் சாப்பிட்டீங்களே.. எப்படி இருந்துச்சு?
சூப்பரா இருந்துச்சு!
இனி அதுக்கு 18% ஜிஎஸ்டி.

--
எனக்கு மசாலா பாப்கார்ன் சாப்பிடணும் போல இருக்கு..

--
ஏற்கனவே தியேட்டர்ல 200 ரூபாய்க்கு மேல தான் பாப்கார்ன் விக்கிறாங்க இப்போ GST வேறயா?
இனி நிம்மதியா யாரும் பாப்கார்ன் கூட சாப்பிட முடியாது போல!

--
நல்ல ஐடியா
எதை சேர்த்தால் பாப்கார்ன் இன்னும் நல்லா இருக்கும்?
நிதி அமைச்சர்: ஜி.எஸ்.டி

--
ஏ.. வேணாம்டா.. வேணாம்டா.. பாப்கார்னே வேணாம்டா!

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications