லீவு விடலைனா வேகமா வருவான்.. லீவு விட்டா வரவே மாட்டான்.. மண்டகோளாரு புடிச்சவன்!
சென்னை : வெள்ளிக்கிழமையாகி விட்டது இனி இரண்டு நாட்கள் பள்ளிகள் விடுமுறை என நிம்மதியாக இருக்கலாம் என மாணவர்கள் நினைத்தால், 'அப்படி எல்லாம் விட மாட்டோம்' என மீம்ஸ் போட்டு மீண்டும் பள்ளியை நினைவு படுத்தி வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
ஒரு வழியாக அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, விடுமுறை ஆரம்பிக்கப் போகிறது என குஷியில் இருக்கின்றனர் நம் மாணவர்கள். இனி மழை வந்தால் என்ன, வெயில் வந்தால் என்ன.. நமக்கு இன்னும் பத்து நாட்களுக்கு விடுமுறைதான் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. ஒரு சில மாணவர்களுக்கு இன்னும் தேர்வுகள் மிச்சமிருக்கின்றன. அதை முடித்து விட்டால் விடுமுறை என ஜாலியாக உள்ளனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் பள்ளி வகுப்பறையை நினைவு படுத்தும் வகையில் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து, இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். மழையை எதிர்பார்த்து ஏமாந்து போய் விடுமுறை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருப்பவர்களைக் கலாய்ப்பதுபோல், "லீவு விடலைனா வேகமா வருவான்.. லீவு விட்டா வரவே மாட்டான்.. மண்டகோளாரு புடிச்சவன்!" என மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதேபோல், "வேலைக்கு போறதுக்காக படிச்சவன் இல்லடா இந்த இஞ்சினியர்ஸ்.. படிச்சதுக்காக வேலைக்கு போறவன்டா!" என சைடுகேப்பில் இஞ்சினியரிங் ஸ்டூடன்ஸ்களையும் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











Click it and Unblock the Notifications
