மனங்களை குளிர்வித்த மாமழை!... சமூகவலைதளங்களில் கரைபுரண்டோடும் மழைக்கவிதைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மழையின்றி காத்துக்கிடந்த வறண்ட நிலங்களைப் போல மனங்களும் மழைக்காக ஏங்கிக்கிடந்துள்ளது என்பதை இன்று டுவிட்டரில் பலர் மழைக்காக வெளியிட்டிருக்கும் கவிதைகள் காட்டுகின்றன.

மழைக்காலத்தில் நீரை சேமித்து வைக்காததன் அருமையை உணரத் தொடங்கியுள்ளனர் மக்கள். தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், பொய்த்துப் போன விவசாயம் என்று நீரின்றி எதுவும் அசையாது என்பதை இயற்கை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.

சரியான நீர் மேலாண்மை இல்லாததால் விளைநிலங்கள் கரிசல் காடுகளாகிப் போன. மழை தலைக்காட்டுமா என்று ஏங்கிக் கிடந்த நிலங்கள் போல மனங்களும் மழைக்காக ஏங்கின. இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக நேற்று இரவு முழுவதும் பெய்த மழை வார இறுதி நாளான இன்றைய அதிகாலைப் பொழுதை ரம்மியமான பொழுதாக்கியது.

மழையை ரசித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள கவிதைகளின் சில தொகுப்புகள் இதோ:

தோரணம் கட்டும் மழை

ஆடி மாதத்தில் கோவில்களில் வேப்பிலை தோரணம் கட்டினால், மழைச் சாரல்கள் சார சாரயாய் தோரணம் கட்டுகிறது. சடசடவென விழும் சாரல்கள் படபடவென பட்டுத்தெறிக்கும் வரிகளை உண்டாக்கியுள்ளது.

# மழை முத்தம்

மேககூட்டங்கள் நடுவே மழை இருக்கிறதென்று தெரியவில்லை. அதனால்தான் தென்றல் தொட்டு மழைநீர் மண்ணை முத்தம் இடுகின்றது என்று டுவீட்டியுள்ளார் ஒரு நெட்டிசன்.

வெள்ளி முத்து

வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறைக்கு மண்வாசனையையும் மழையின் நிறத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த கவிதை. துள்ளி விழும் தூறலை அள்ளி தெளித்தால் மனம் தெளிவாகும்.

வருக வருக!

மண்ணை வளமாக்கும் மழையை வரவேற்று டுவீட்டியுள்ளார் நெட்டிசன் ஒருவர் இந்தக் கவிதையை. இயற்கையின் வரத்தை வரவேற்கும் அழகிய கவிதை.

அழு வானமே அழு

வானம் அழுதால் தான் மழை. வானமே நன்றாக அழு நீ அழவில்லையென்றால் ஏழை விவசாயிகளின் தற்கொலைக்காக நாங்கள் அழ வேண்டியிருக்கும் என்று டுவீட்டியுள்ளார் மற்றொரு நெட்டிசன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dried land of Tamilnadu not only wet by Rain but also the Netizens hearts, chill climate induces all to wrote rain poetry.
Please Wait while comments are loading...