வாள் தூக்கி நின்னான் பாரு.. ஜான் ஸ்னோவாக மாறிய ஜித்தேஷ் சர்மா.. அதிரவிடும் ஆர்சிபி மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலமாக ஆர்சிபி அணி குவாலிஃபையர் முதல் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இதனை வைத்து ஆர்சிபி அணி ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

கவுண்டமணி ஒரு படத்தில், "இதுக்கு மேல நீ வயசுக்கு வந்தா என்ன.. வரலைனா என்ன.. எல்லாமே போச்சு" என்று மருத்துவமனையில் படுத்தவாறு பேசுவார். இதில் கவுண்டமணியாக லக்னோ ஓனர் கொயங்காவையும், அந்த பெண்ணாக ரிஷப் பண்ட்-ஐயும் மாற்றி, "இதுக்கு மேல நீ ஃபார்முக்கு வந்தா என்ன.. வரலைனா என்ன.. எல்லாமே போச்சு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் செத்த எலி மேல் எத்தனை லாரி ஏறினால் என்ன மொமண்ட்.

ipl 2025 memes virat kohli Jitesh Sharma

சூர்யவம்சம் படத்தில் தேவயானி, "காலம் எவ்வளவு வேகமாக சுத்துது பார்த்தீங்களா.. படிக்காத உன்னை கல்யாணம் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு சென்ற நீங்களே, இப்போது அவர்கிட்ட வேலைக்காக வந்து நிற்கிறீங்க" என்று சொல்வார். அதனை அப்படியே ஆர்சிபி ஃபேன்ஸை பார்த்து பேசுவதாக மாற்றி, "காலம் எவ்வளவு வேகமா சுத்துது பார்த்தீங்களா.. முதல் பாதில ஜித்தேஷ் சர்மாவோட மோசமான கேப்டன்சியை ட்ரால் பண்ண நீங்களே.. இப்போ அவரோட பேட்டிங் பார்த்து ஃபையர் விட்றீங்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள தெரியாம தப்பு பண்ணிட்டோம் மொமண்ட்.

ipl 2025 memes virat kohli Jitesh Sharma

அந்தியன் படத்தில் விக்ரம், "டேய் மொட்ட.. நகருடா" என்பார்.. அதேபோல் தேசிங்குராஜா படத்தில் சிங்கம்புலி, "குறுக்க இந்த கெளசிக் வந்தா" என்று சொல்வார்.. இந்த இரண்டையும் இணைத்து விக்ரமாக ஆர்சிபி அணியையும், "டேய் மொட்ட.. நகருடா.. நான் குவாலிஃபையர் 1 போகணும்" என்று சொல்ல.. அதற்கு சிங்கம்புலியாக லக்னோ அணியை மாற்றி, "குறுக்க இந்த கெளசிக் வந்தா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு மொமண்ட்.

ipl 2025 memes virat kohli Jitesh Sharma

கேம் ஆஃப் த்ரோன்ஸ் இணையத் தொடரில் அத்தனை குதிரைப் படையும் தன்னை நோக்கி ஓடிவரும் போதும் கூட பயப்படாமல் கத்தியை தூக்கி ஜான் ஸ்னோ நிற்பார். அதில் வரும் ஜான் ஸ்னோவாக ஜித்தேஷ் சர்மாவை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் "வாள் தூக்கி நின்னான் பாரு.. வந்து சண்டைப்போட்ட எவனும் இல்லை" மொமண்ட்.

ipl 2025 memes virat kohli Jitesh Sharma

சிவா மனசுல சக்தி படத்தில் சந்தானம், "பொண்ணுக்கும் எனக்கும்தான் செட்டாகலைனு நினைச்சேன்.. இப்போ போனுக்கும் எனக்கும் கூட செட்டாகலைடா" என்பார்.. அதில் வரும் சந்தானமாக ரிஷப் பண்டை மாற்றி, "எனக்கும் செஞ்சுரிக்கும் ராசியே இல்லடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்ன பண்றது சோகமாகதான் இருக்கு மொமண்ட்.

ipl 2025 memes virat kohli Jitesh Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+