"லட்டுல வச்சேன்னு பார்த்தியா, ஜட்டுல வச்சேன்" இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்.. அசத்தல் மீம்ஸ் இதோ!
இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டம் பற்றிய மீம்ஸ் தொகுப்பை பார்க்கலாம்.
நாக்பூர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தலாக செயல்பட்டுள்ளனர். இவர்களை பாராட்டும் வகையில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸ்களை பார்க்கலாம்.
பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்திய அணியின் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களான சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சிராஜ் விக்கெட்
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்ட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது, தான் வீசிய முதல் பந்திலேயே சிராஜ் விக்கெட் வீழ்த்தினார்.

வடிவேலுவும் சிராஜும்
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு முறை பேட்ஸ்மேன் கடந்து பந்து செல்லும் போது சிராஜ் முறைத்தது ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இதனை பகவதி படத்தில் வரும் வடிவேலு மற்றும் விஜய் ஆகியோரை வைத்து வெளியிடப்பட்ட மீம்ஸ் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அலெக்ஸ் பாண்டியன் கார்த்தி
அதேபோல் ஜடேஜா மற்றும் அஸ்வின் மட்டும் இணைந்து 8 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், இந்திய பந்துவீச்சாளர்களில் அக்சர் படேல் மட்டும் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது. இதனை கிண்டல் செய்யும் வகையில், "நீங்களே எல்லா விக்கெட்டையும் எடுத்துட்ட நான் எப்படியா விக்கெட் வீழ்த்துவது" என்று சந்தானம் - கார்த்தி பேசும் வகையில் மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வீரர்கள் விக்கெட் வேட்டை நடத்தியதும் மறைமுகமாக பாராட்டப்பட்டுள்ளது.

ஜட்டுவின் சாதனை
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை எதிர்கொள்வது எப்படி என்றே டெஸ்ட் தொடருக்கு முன் அதிகமாக சிந்தித்தும், பேசியும் வந்தனர். ஆனால் அவுட் ஆஃப் சிலபஸாக வந்த ஜடேஜா, அசத்தலாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ரோகித்தின் திட்டம் என்பது போல், அயன் படத்தில் வரும் வில்லன் பேசும், லட்டுல வச்சேனு நினைச்சியா தாஸ் வசனத்தை, அஸ்-ல வச்சேனு நினைச்சியா ஆஸி., ஜட்டுல வச்சேன் என்று பேசுவது உருவாக்கப்பட்டுள்ள மீம்ஸை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

பார்ட்னர்ஷிப்
அதேபோல் ஆஸ்திரேலியா பேட்டிங்கின் போது, எப்போதெல்லாம் பார்ட்னர்ஷிப் உருவாகிறதா அப்போதெல்லாம் அஸ்வினும் - ஜடேஜாவிக்கெட் வீழ்த்தினர். அதனை கிண்டல் செய்யும் வகையில் காதலே பிடிக்காத வடிவேலு, ரோஜாவை பார்த்ததும் மருந்து அடிப்பது போல் மீம் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

வேகப்பந்துவீச்சாளர்கள்
அதேபோல் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தான் விக்கெட் வேட்டையை தொடங்குவார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவின் கவாஜா மற்றும் வார்னர் ஆகியோரை சிராஜ் மற்றும் ஷமி ஆகியோர் முதல் சில ஓவர்களிலேயே வீழ்த்தி மிரட்டினர். அதிலும் ஷமி வீசிய பந்து வார்னரின் ஸ்டம்பில் அடித்த பறந்த காட்சி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனை குறிப்பிடும் வகையில் மாப்பிள்ளை படத்தின் ஹன்சிகாவை காப்பாற்ற விவேக்கை முந்தி செல்லும் தனுஷ் வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications