திமுகவுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாஜக.. டிவிட்டரில் வெளியிட்ட ஒற்றை மீம்.. அல்லோகலம்
Recommended Video
சென்னை: தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு சமீப காலமாகவே படு உற்சாகத்துடன் இயங்கி வருவது நீங்கள் அறிந்ததே.
இப்போது விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு, பாஜக நிர்வாகிகளை கையில்பிடிக்க முடியுமா என்ன?
பாஜக ட்விட்டர் கணக்கில் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள ஒரு மீம், திமுக ஆதரவாளர்களை கடுப்படையச் செய்துள்ளது.
|
வடிவேலு மீம்ஸ்
மீம்ஸ் என்றாலே வடிவேலுவை தவிர்க்கமுடியாது அல்லவா. இதேபோலத்தான் வடிவேலு டயலாக் ஒன்றை பயன்படுத்தி இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தில் வடிவேலுவின் கூட்டாளி, சோனமுத்து என்ற கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரத்திடம், கன்னத்தில் அறை வாங்கும். இதனால் வடிவேலு நண்பர் சோனமுத்து செவிப்பறை கிழிந்து, ஒரு பக்கம் காது கேட்காது.

சோன முத்தா போச்சா?
இதை பார்த்ததும், வடிவேலு, என்ன சோன முத்தா போச்சா? என்று கிண்டலாக பேசுவார். இந்த வார்த்தை சமூக வலைதளங்களில் பிரபலம். இதைத்தான் பாஜகவும் இன்று கையிலெடுத்துள்ளது. திமுகவை கிண்டல் செய்வதற்காக.

பாஜக டிவிட்டர்
திமுக தொண்டர் ஒருவர் கட்சி கொடியை தலை மீது போட்டுக்கொண்டு அமர்ந்து இருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டு, சோனமுத்தா போச்சா என்று அதற்கு கேப்ஷன் கொடுத்ததோடு சிசி அறிவாலயம் என்று திமுக கட்சியின், ட்விட்டர் கணக்கிற்கும் அதை ஷேர் செய்துள்ளது.

திமுக நெட்டிசன்கள் விமர்சனம்
இதைப்பார்த்த திமுக ஆதரவாளர்கள், விமர்சனம் செய்து வருகிறார்கள். இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறவில்லை. அதிமுகவும் ஒரு திராவிட கட்சி தான். உங்களைத் தான் தொகுதி பக்கமே வரக்கூடாது என்று சொல்லி விட்டார்களாமே, என்றெல்லாம் திமுக ஆதரவு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து பின்னூட்டம் போட்டு வருகின்றனர்.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
வேகம் எடுக்கும் திமுக.. வேட்பாளர்கள் யார் யார்.. 17 ஆம் தேதி நேர்காணலை தொடங்குகிறார் ஸ்டாலின் -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
ராஜீவ் காந்தி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த கனிமொழி.. திருச்சி மாநாட்டில் சம்பவம்! ஷாக்கில் உதயநிதி -
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்!












Click it and Unblock the Notifications