வீரவசனம் பேசும் ”லயன்”.. வடிவேலுவாக புலம்பும் விராட் கோலி.. மீம்ஸ் வடிவில் 2ம் நாள் ஆட்டம்.. இதோ!
இந்தியா - ஆஸி. இடையிலான 2ம் நாள் ஆட்டத்தை மீம்ஸ் வடிவில் பார்க்கலாம்.
சென்னை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை மீம்ஸ்களாக பார்க்கலாம்.
பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லியில் தொடங்கியது.
முதலில் பேட்டிங்கை செய்த ஆஸ்திரேலியா அணி கவாஜா மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோரின் அரைசதத்தால் 264 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் வழக்கம் போல் டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்ப அக்சர் படேல் மற்றும் அஸ்வின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக் 262 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகியது. இன்று நடைபெற்ற முக்கிய சம்பவங்களை மீம்ஸ்களாக பார்க்கலாம்.

ஆஸி.யின் செம்மையான பதிலடி
இன்றைய ஆட்டம் தொடங்கியது முதலே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நேதன் லயன் அபார பந்துவீசினர். குறிப்பாக இந்திய டாப் ஆர்டர் வீரர்களான கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோரை அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனை மையமாக வைத்து, மாரி படத்தில் வரும் கருட புறா காட்சிகள் மூலம் ரசிகர்கள் மீம் உருவாக்கியுள்ளனர். அதில் ரோபோ ஷங்கர் பேசும், பாத்தீலா, நம்ம பிராடக்டா என்ற வசனத்தை கம்மின்ஸ் பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் இன்னொரு காமெடி என்னவென்றால், அந்த காட்சியில் வரும் நடிகருக்கும், லயனுக்கும் தலை முடி இல்லாமல் இருப்பது சரியாக அமைந்துள்ளது.

"புதுப்பேட்டை" லயன்
அதுமட்டுமல்லாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளர்களிடம் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால், 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. ஸ்ரேயாஸ், விராட் கோலி என அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்தனர். அதனை குறிப்பிடும் வகையில், புதுப்பேட்டை படத்தில் வரும் அழகம் பெருமாள் பேசும், இன்னிக்கு நைட் தாண்டிருவ நீ வசனத்தை, லீட் எடுத்துருவ நீ, என்னைய தாண்டி லீட் எடுத்துட்டா வீரன்டா என்ற வசனத்தை மீமாக உருவாக்கியுள்ளனர். அந்த அளவிற்கு லயன் சிறப்பாக பந்துவீசினார்.

இந்தியாவுக்கு அஸ்வின், ஆஸி.க்கு லயன்
இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய லயன், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் பார்டர் - கவாஸ்கர் கோப்பைத் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதனை பாராட்டும் வகையில், சுந்தரபாண்டியன் படத்தில் புகைப்படம் மூலம், உங்களுக்கு எப்படி அஸ்வினோ, ஆஸ்திரேலியாவுக்கு அவரு என்று லயனின் மாஸ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இந்த மீம் ரசிகர்களிடையே அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

விராட் கோலியும் நடுவரும்
அதேபோல் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 44 ரன்களுடன் சிறப்பாக ஆடி வந்த போது, திடீரென சர்ச்சைக்குரிய வகையில் நடுவர்களால் அவுட் கொடுக்கப்பட்டது. சரியாக பந்து பேட் மற்றும் பேடில் பட்டுச்சென்றது. இதனால் குழம்பிய நடுவர்கள், விராட் கோலிக்கு அவுட் கொடுத்தனர். ஆனால் விராட் கோலியின் பேட் பந்தில் பட்டது பின்னர் தெரிய வந்தது. இதனை நக்கல் செய்யும் வகையில், ரெண்டு படத்தில் வடிவேலு - போண்டா மணி காமெடியான, என்னிடம் சலசம் பன்றதுக்கே ஆத்தா அப்பன் பெத்து உட்ருக்காங்களா வசனத்தை விராட் பேசுவது போல் மீம் உருவாக்கியுள்ளது. அதேபோல் அவுட் கொடுத்த அம்பயரை, அடிப்பதற்காக விராட் கோலி முகவரி வாங்குவது போலவும் மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

அவனுக்கு பயமில்லை
அதேபோல் 135 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிய இந்திய அணியை அக்சர் படேல் அதிரடியாக அரைசதம் அடித்து காப்பாற்றினார். 3 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்த அக்சர் படேலை பாராட்டும் வகையில், பொல்லாதவன் படத்தின் வரும் செல்வம் கதாபாத்திரம் பேசும் அவனுக்கு பயமில்ல வசனத்தை வைத்து ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications