எதே... வந்தோரை ‘நீந்த’ வைக்கும் சென்னையா... அது ‘வாழ’ வைக்கும் சென்னைனு தானேய்யா வரும்!
சென்னை மற்றும் தொடர் மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மழை குறைந்தாலும் இன்னமும் பல இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னமும் முழுமையாக வடியவில்லை. இது போதாதா இதை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மழையோ, வெயிலோ எதாக இருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்களைப் பொறுத்தவரை பிக் பாஸ் வீடு மாதிரி கண்டெண்ட்டாக மட்டுமே யோசிப்பார்கள். ஏப்ரல், மே மாதங்களில் தகிக்க தகிக்க சூரியனை வைத்து மீம்ஸ் மழை பொழிபவர்கள், நவம்பர் , டிசம்பர் மாதங்களில் மழையை வைத்து போட் விட ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த முறையும் அப்படியாக மீம்ஸ்களுக்கு பஞ்சம் வைக்கவில்லை சமூகவலைதளங்கள். மழை விட்டு, மெல்ல மெல்ல சூரியனே மீண்டும் வேலைக்கு திரும்பி விட்ட போதும், இன்னமும் மீம்ஸ்களில் மட்டும் மழை நீர் தேங்கித்தான் கிடக்கிறது.
மழை நீர், வெள்ளம், படகு என வளைத்து வளைத்து மழைக்கால மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications