சீக்கிரமா தூங்கினா மட்டும் போதுமாடா.. முதல்ல அதுக்கு எங்களுக்கு கல்யாணம் ஆகணுமேடா!
90ஸ் கிட்ஸ் பற்றிய மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
சென்னை : ஊரெல்லாம் திருமணங்கள் பற்றிய பேச்சாகவே இருக்க, வழக்கம் போல் மீம்ஸ் போட்டு நமது 90ஸ் கிட்ஸ்களை வம்பிழுக்க ஆரம்பித்து விட்டனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.

புரட்டாசி பிறப்பதற்குள் முகூர்த்தங்களை முடித்துவிட வேண்டும் என அவசர அவசரமாக நடத்துவதுபோல், ஊரெல்லாம் எல்லா கல்யாண மண்டபங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த திருமணத்திற்குப் போவது, எதை விடுவது எனத் தெரியாமல்,ஒவ்வொருவரும் ஒவ்வொரு திருமணத்திற்கென குடும்பத்திற்குள்ளேயே பிரித்து, பிரித்து திருமண விழாக்களில் பங்கெடுத்து வருகின்றனர்.
இப்படி ஊரெல்லாம் திருமணக் கோலமாக இருக்க, இன்னமும் நமக்கு ஒரு திருமணம் நடக்கவில்லையே என ஏற்கனவே ஆதங்கத்தில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்களின் வெந்தப் புண்ணில் வேளைப் பாய்ச்சுவது போல், மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ்கள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications