15 வயது சிறுவனுக்கு கிட்னியில் பெரும் பாதிப்பு.. நீங்கள் நினைத்தால் உதவலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்னி பாதிப்பால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் சிறுவன் பிரேமின் அறுவை சிகிச்சைக்கு உடனே உதவுங்கள்!

என் மகனின் கிட்னி பாதிப்பு தற்போது ஐந்தவாது கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனால் அவன் பரிதாபகரமான நிலைக்கு சென்றுள்ளான். அவனது உடல் மிகவும் மோசமாக இருக்கிறது, என்று கூறிகொண்டு இருக்கும் போதே சரகலா உடைந்து அழுகிறார். யாருடைய பெற்றோரும் இந்த மோசமான நிலைக்கு ஆளாக கூடாது.

அவருடைய 15 வயது மகன் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இதோடு 1 வருடம் ஆக போகிறது. அவரின் மகன் பிரேமிற்கு குரோனிக் கிட்னி நோய், ஹைப்பர் டென்ஷன் மற்றும் குரோனிக் குளோமெருலோன்ப்ரிட்டிஸ் ( chronic kidney disease, hypertension and chronic glomerulonephritis ) ஏற்பட்டுள்ளது . இதனால் அவனின் கிட்னியில் ரத்தத்தை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்றும் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் அம்மாவின் வாழ்க்கையில் இது புதிய நிகழ்வு அல்ல:

சில வருடங்களுக்கு முன் சரகலாவின் கணவர் காமேஷ், இதேபோல் கிட்னி நோயால் பாதிக்கப்பட்டார் . இதனால் உடனே அவர் படுத்த படுக்கையானர். அவரால் நடக்க முடியவில்லை, சிறிய விஷயங்களை செய்ய கூட அவர் கஷ்டப்பட்டார். அவர்களின் வாழ்க்கையை அது புரட்டி போட்டு நிலை குலைய வைத்தது. அவர்களின் வீட்டை நடத்த கூட வருமானம் இல்லாமல் போனது.

இதனால் சரகலா குடும்ப பொறுப்பை அவரே கவனிக்க தொடங்கினார். அவரே பணிக்கு சென்று வீட்டு வேலைகள் செய்து, மாதம் 4000 ரூபாய் சம்பாதித்து வருகிறார். ஆனால் குடும்ப தேவைகளை எப்படியோ அவர் பூர்த்தி செய்து வருகிறார்.

அம்மா இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்வதை பார்த்துதான் அவரின் மகன் பிரேம் வளர்ந்து வந்தார். அவன் நன்றாக படிக்க கூடிய பையன் , பெரிய வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவன். அவன் எப்போதும் அம்மா நான் நல்ல வேலைக்கு போய், நல்லா சம்பாரிச்சு, உங்களுக்கு வீடு வாங்கி தருவேன், என்று கூறுவான் என்று அவனின் அம்மா சரகலா தெரிவிக்கிறார். ஆனால் அவனுக்கு விதி வேறு சில திட்டங்களை வைத்து இருந்தது.

படுத்த படுக்கையான சிறுவன்:

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் பிரேமிற்கு கிட்னி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அப்போதில் இருந்தே அவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது . இதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் தற்போது இவன் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையை அடைந்துள்ளான். அவனின் ரத்த அழுத்தம் அதிகமாகி, அவனின் கால்களிலும், மூட்டுகளிலும் அதீத வலி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அவனின் அம்மா சரகலா, அவன் வாழ்க்கையை துறந்துவிட்டது போல உணர்கிறேன். அவன் அதீத வலியில் இருக்கிறான். அவன் சிரிப்பதை பார்த்தே பல வருடங்கள் ஆகிறது. நான் கஷ்டப்படுவேன் என்பதற்காக அவன் எனக்கு முன்பாக அழ கூட மாட்டான், என்று குறிப்பிட்டுள்ளார்.

அவனுக்கு உடனே கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், அவனின் உயிரை காக்க முடியாது என்று கூறுகிறார்கள். இதற்காக செய்யப்பட்ட சோதனைகள் மூலம் சரகலா பிரேமிற்கு கிட்னி கொடுக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த சிகிச்சையை செய்ய 10 லட்சம் ரூபாய் செலவு ஆகும். இதற்கு முன்செலவாக 1 லட்சம் ரூபாய் செலவு ஆகும்.

இது குறித்து பேசிய அவனின் அம்மா சரகலா, நான் எனக்கு தெரிந்த எல்லோரிடமும் பணம் கேட்டுட்டேன். ஆனால் எனக்கு அவ்வளவு பணம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. என்னிடம் ஒரு ரூபாய் கூட சேமிப்பு பணம் இல்லை. என்னிடம் விற்கவும் எதுவும் இல்லை, என்று அவர் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

மேலும், என்னுடைய கணவரும் நோயில் இருக்கிறார். அவரால் தன்னுடைய குழந்தையை கூட காக்க முடியவில்லை என்று அவர் புலம்பி வருகிறார். ஆனால் இதெல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்கள் குழந்தையை காக்க கொஞ்சம் உதவுங்கள், என்று அவர் கண்ணீர் விடுகிறார்.

எப்படி உதவி செய்வது?

அந்த குடும்பத்தில் அவனின் அம்மா சரகலா மட்டுமே பணியாற்றுகிறார். அவரிடம் தற்போது சிகிச்சைக்காக ஒரு ரூபாய் கூட இல்லை. உங்களின் சிறிய உதவி கூட அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பிரேம் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் பிரேம் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

கீட்டோ. நிறுவனம் பற்றிய குறிப்பு:

ketto.org, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் நிதி திரட்டி உதவக்கூடிய ஆன்லைன் நிதி திரட்டும் மையம் ஆகும் இது. Ketto நிறுவனம் மக்களுக்கு கேன்சர் சிகிச்சை, லூக்கிமியா சிகிச்சை, இதய மாற்று சிகிச்சை மற்றும் மற்ற சிகிச்சைகள் மேற்கொள்ள பணம் திரட்டி உதவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+