For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பட்ஜெட் உரையில் குறுக்கீடு செய்த அதிக எம்.எல்.ஏ. வெளியேற்றம்

சென்னை:

தமிழக சட்டசபையில் தல்வர் கருணாநதி வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தபோது, குறுக்கீடு செய்ததாக அதிக உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.

தல்வர் கருணாநதி வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபையில், 2000-2001வது ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதற்காக அவை வெள்ளிக்கிழமை கூடியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் எழுந்து, மத்திய அரசு மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் விலையை உயர்த்தியது நயாயமானதே என்று தல்வர் கருணாநதி அறிக்கை விடுத்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறக் கோ சட்டசபையில் தல்வர் தீர்மானம் கொண்டு வர வேண்டும். தேசிய ஜனநிாயகக் கூட்டணியிலுள்ள தெலுங்குதேசம், திருனல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கோ வருகின்றன என்றார்.

அப்போது இதுதொடர்பாக கருத்து தெவிக்க அதிக உறுப்பினர் சுந்தரம் எழுந்தார். அவரை உட்காருமாறு சபாநிாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பணித்தார். ஆனால் உட்காராமல் தொடர்ந்து சுந்தரம் பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து, உடனடியாக சுந்தரம் உட்கார வேண்டும். அவர் கூறுவது எதுவும் சபைக் குறிப்பில் ஏறாது என்றார்.

சபாநிாயகரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து சுந்தரம் பேசிக் கொண்டிருக்கவே, இப்போது சுந்தரம் உட்கார வேண்டும். இல்லாவிட்டால் அவையிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்றார். அதற்கும் பலன் இல்லாமல் போகவே, அவைக் காவலர்களை அழைத்து சுந்தரத்தை வெளியேற்றுமாறு சபாநிாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே நுழைந்து சுந்தரத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

தேர்தல் கால பட்ஜெட்:

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சிகள் கூறுகையில், இது தேர்தல் கால பட்ஜெட் என்று வர்ணித்தன. பா.ம.க, பா.ஜ.க., எம்.ஜி.ஆர். அதிக ஆகிய கட்சிகள் இதை மக்கள் நிலன் காக்கும் பட்ஜெட் என்று கூறின.

தமாகா சார்பில் அழகி எம்.எல்.ஏ. பேசுகையில், வறட்சியான பட்ஜெட். புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. பற்றாக்குறையை தீர்க்க எந்த வழி வகையும் கூறப்படவில்லை. மத்திய அரசின் மொத்த வருவாயில் 29 சதவீதம் மாநலங்களுக்கு தரப்பட வேண்டும். அந்தப் பங்கை விளம்பர அறிவிப்புகள் தான் உள்ளன என்றார்.

அதிக சார்பில் சட்டசபை தலைவர் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறுகையில் தேர்தல் வாடை வீசும் பட்ஜெட். விவசாயிகள், தொழிலாளர்கள், நிெசவாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. கூட்டுறவுக் கடன் பற்றி எதுவும் கூறப்படவில்லை. மொத்தத்தில் தேர்தலுக்கான விளம்பரமாகத்தான் இது உள்ளது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.பழனிச்சாமி கூறுகையில், விவசாயிகள் தங்களின் கடன் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றே கோனர். ஆனால் அரசு வெறும் அபராத வட்டியை மட்டும் ரத்து செய்துள்ளது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X