தமிழகத்தில் இன்று
டெல்லி:
30-க்கும் மேற்பட்ட இன்டர்நெட் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு கருவி தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின்பங்குச் சந்தை நிலவரம் குறித்து விசாரணை நடத்த மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவேர்ல்ட்.காம் என்ற இன்டர்நெட் நிறுவனத்தை, சத்யம் இன்போவே நிறுவனம் ரூ. 5 பில்லியனுக்கு வாங்கியது குறித்தும் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது.
ஹிமாச்சல் பியூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ், பென்டாமீடியா கிராபிக்ஸ், பத்மினி பாலிமர்ஸ், பிரன்டியர் இன்போடெக், காடில்லா ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள்விசாரணைக்குட்பட்டுள்ள சில நிறுவனங்கள்.
இவை தவிர, ஐ.சி.ஐ.சி.ஐ., யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா, எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பன்ட் ஆகிய நிறுவனங்களின் பங்கு வர்த்தகம் குறித்தும் நிதி அமைச்சகம் விசாரித்துவருகிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!