தமிழகத்தில் இன்று
மே 5-ல் திருச்சியில் பா.ம.க செயற்குழு அவசரக் கூட்டம்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு அவசரக் கூட்டம் மே 5-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான தமிழக ராஜீவ்காங்கிரஸுக்கும் இடையே சமீபகாலமாக கருத்து மோதல்கள் நடந்து வரும் இந் நேரத்தில் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் முதல்வர் மு. கருணாநிதி, இரு கட்சிக்கும் இடையேயான மோதலைத் தவிர்க்கநடவடிக்கை எடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸும் கட்சிப் பிரமுகர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி வேறு கட்சியில் சேரும் முடிவில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி திடீரென்று தனது முடிவைமாற்றிக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் இப்படி அடிக்கடி தனது கருத்தை மாற்றிக் கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியிலிருந்து விலக்க திமுக முடிவுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பாட்டாளி மக்கள் கட்சிக்கு மத்திய அரசில்இரு அமைச்சர்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்கள் உள்ளனர்
இந்தப் பின்னணியில் பாட்டாளி மக்கள் கட்சியில் அவசர செயற்குழுக் கூட்டம் மே 5-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.