தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
ராணுவம் உடனே வெளியேற வேண்டும்: புலிகள் ரேடியோ எச்சரிக்கை

கொழும்பு:

இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து உடனடியாக சிங்கள ராணுவ வீரர்கள்வெளியேற வேண்டும் என்று விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

புலிகள் குரல் எனப்படும் புலிகளின் ரேடியோ அறிவிப்பின் மூலம் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புலிகளின் எச்சரிக்கையில், நாங்கள் எங்கள் பகுதியான யாழ்பாணத்தை கைப்பற்றிவிட்டோம். எங்களுக்குத்தனிஈழம் வேண்டும். இங்கிருந்து சிங்கள சிப்பாய்களே நீங்கள் ஓடி விடுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, யாழ்ப்பாணம் அருகில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தகவல் தொடர்பு நிலையத்தைதகர்த்துவிட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை ரேடியோ செய்தியில், விடுதலைப்புலிகளின் தகவல் தொடர்பு மையத்தை இலங்கைராணுவத்தினர் தகர்த்துவிட்டதால் அவர்கள் பலமிழந்து காணப்படுகிறார்கள். இப்போது அவர்களுக்குள் தொடர்புபாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக போர் தீவிரமடைந்துள்ளது. இது வரை நடந்த போரில் இரு தரப்பிலும்நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே இலங்கை அதிபர் சந்திரிகா விடுதலைப்புலிகளை எதிர்த்துப் போரிடுவதற்கு இலங்கைராணுவத்தினருக்கு நவீன ஆயுதங்களும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையே டியூஎல்எஃப் துணைத் தலைவர் அனந்தசனங்காரி இலங்கைக்கான இந்தியத் தூதர் சிவசங்கர்மேனனைச் சந்தித்துப் பேசினார். போர் நடக்கும் பகுதியில் வாழும் 5 லட்சம் மக்களைக் காக்கும் வகையில்அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

யாழ்பாணத்தில் தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

யு.என்.ஐ.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற