தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

மே 14, 2000

                                   

1.குயிலின் பாட்டு

காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். (காதல்)


1.அருளே யாதல் வொளியே;
ஒளிபோ மாயின்; ஒளிபோ மாயின்,
இருளே. இருளே, இருளே. (காதல்)


2.இன்பம்,இன்பம், இன்பம்,
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம். (காதல்)


3. நாதம், நாதம், நாதம்,
நாத்த தேயோர் நலிவுண்டாயின்,
சேதம், சேதம், சேதம். (காதல்)


4. தாளம், தாளம், தாளம்,
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம்,கூளம்,கூளம். (காதல்)


5. பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண்டாயின் ,
மண்ணே, மண்ணே. மண்ணே. (காதல்)


6. புகழே, புகழே, புகழே;
புகழழுக் கேயோர் புரையுண்டாயின்,
மண்ணே, மண்ணே,மண்ணே. (காதல்)


7. உறுதி, உறுதி,உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண்டாயின்,
இறுதி, இறுதி,இறுதி. (காதல்)


8. கூடல், கூடல்,கூடல்;
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல். (காதல்)


9.குழலே, குழலே, குழலே
குழலிற் கீறல் கூடுங்காலை,
விழலே, விழலே, விழலே. (காதல்)


(அடுத்து குயிலின் காதற் கதை)

Back To Index

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற