தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil
மதுரையில் புதிய ரக ஆவின் பால் அறிமுகம்

மதுரை:

மதுரையில் பிரீமியம் மில்க்" என்ற பெயரில் புதிய ரக பாலை ஆவின் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிமுகம்செய்தது.

மதுரையில் நடைபெற்ற எளிய விழாவில் புதிய பால் விற்பனையை மாவட்ட கலெக்டர் வி. தங்கவேலு துவக்கிவைத்தார். இப் புதிய ரக பாலில் 9 சதவீதம் புரதச் சத்தும், 4.5 சதவீதம் கொழுப்புச் சத்தும் உள்ளது. ஒரு லிட்டர்பாக்கெட்டுகளில் இப் பால் விற்கப்படுகிறது. ஒரு பாக்கெட்டின் விலை ரூ.14.

மதுரையில் உள்ள அனைத்து ஆவின் பால் விற்பனை நிலையங்களில் இப் பால் விற்பனைக்குக் கிடைக்கும்.

யு.என்.ஐ.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற