தமிழகத்தில் இன்று
துபாய்:
சவுதி அரேபியாவில் கொலை, போதைப் பொருட்கள் கடத்தல், கற்பழிப்பு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டது தொடர்பாக 4 பேருக்கு தலையைத்துண்டித்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மரண தண்டனை பெற்ற நான்கு பேரில் இரண்டு பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள்.
ஈராக்கைச் சேர்ந்த வாலிபர் போதைப் பொருட்களைக் கடத்தும் போது சவுதிஅரேபியா போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஈராக்கைச் சேர்ந்தவாலிபர் போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் சவுதிஅரேபியாவில் பிடிபடுவது இதுவே முதல்முறை.
எகிப்தைச் சேர்ந்த இன்னொருவர் வாலிபர், இன்னொரு வாலிபரை மிரட்டி பணம் பறித்து விட்டு அவரைக் கொலை செய்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி,அதை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். இவருக்கும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சவுதிஅரேபியாவைச் சேர்ந்த இன்னும் இரண்டு வாலிபர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிப்பு வழக்கில்சம்பந்தப்பட்டவர்கள்.