தமிழகத்தில் இன்று
பீகாரில் மீண்--டும் ஜாதிப் படை-க-ள் தாக்-கு-தல்: 35 பேர் படுகொலைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பாட்னா:
பீகார் மாநிலம் மியாபூர் கிராமத்தில் தடை செய்யப்பட்ட ரன்வீர் சேனா படையினரால் 35 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை இரவு இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. இறந்த அனைவரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். ரன்வீர் சேனா என்பது,கிராமத்துப் பண்ணையார்களால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படை. இந்த அமைப்பு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இந்த அமைப்புக்குஅரசு தடை விதித்தது.
ரன்வீர் சேனா படையைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய கும்பல் வெள்ளிக்கிழமை இரவு மியாபூர் கிராமத்திற்குள் நுழைந்தது. அங்கு தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதில் 35 பேர் இறந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
படுகொலைச் சம்பவத்திற்குப் பின் அக்கும்பல் தப்பியது. சம்பவம் நடந்த இடத்திற்கு மாநில போலீஸ் டி.ஜி.பி. கே.ஏ.ஜேக்கப் உள்பட உயர் அதிகாரிகள்விரைந்துள்ளனர்.
முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.
குற்றவாளிகள் தப்பி விடாமல் இருப்பதற்காக மியாபூருக்கு பக்கத்து மாவட்டங்களான, ஜெகனாபாத், கயா ஆகிய மாவட்ட காவல்துறையினர்உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி சேனாரி கிராமத்தில் 34 பேரை மக்கள் போர்க்குழு என்ற நக்சலைட் படையினர் சுட்டுக் கொன்றனர்.அதற்குப் பழி வாங்கும் விதத்தில் இப்போதைய படுகொலைச் சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாதம் 3-ம் தேதி ஐந்து பிற்பட்ட வகுப்பினர், ராஜ்பேகா கிராமத்தில் கொல்லப்பட்டனர். பதிலுக்கு 11-ம் தேதி, உயர் வகுப்பைச் சேர்ந்த12 பேர் கொல்லப்பட்டனர்.
யு.என்.ஐ.