தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

பா.ம.கா-வின் -சீட் பேர-மும்...கல-கக்-கும் கூட்-ட--ணி-க-ளும்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

தமிழசட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. இந்த நிலையில் தமிழ அரசியல் கட்சிகளின்கூட்டணி வியூகங்களும் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை இருந்த கூட்டணி கட்சிகளின் நிலை மாறி அடுத்தடுத்தகாட்சிகள் ஆரம்பிக்க இருக்கின்றன.

தமிழகத்தைப்பொறுத்தவரை பெரும்பாலான கட்சிகள் திராவிடக்கட்சிகளின் ( அ.தி.மு.க அல்லது தி.-மு.க )துணையோடுதான் , கூட்டணி அமைத்துச்செயல்படுகின்றன. தற்பொழுதை கூட்டணி -நிலவரப்படி தி.-மு.கவுடன்பா.ஜ.க, ம.தி.-மு.க, பா.ம.க , இன்னும் சில கட்சிகளும் கூட்டணி யாக இருக்கின்றன.

அ.தி.மு.க வோடு காங்கிரஸ், த.மா.கா, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் சில கட்சிகள் கூட்டணி கட்சிகளாகஇருக்கின்றன. இந்த -நிலையில், தற்பொழுது தங்களுடன் இருக்கின்ற கட்சிகளின் செல்வாக்கு பற்றி , தி.மு.க.,அ.தி.-மு.க இருகட்சிகளின் தலைவர்களுமே ஆராய்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா தமிழகம் முழுக்க ஒரு சர்வேயே -நடத்திடித்துவிட்டார் என்கிறார்கள். அந்த -முடிவின் படிதான் வரும்மாதங்களில் , ஜெயலலிதாவின் அணுகுறையும் இருக்கும். அந்த சர்வேயில் ஜெயலலிதா, த.மா.கா, காங்கிரஸ் ,பா.ம.க ஆகிய கட்சிகள் பற்றி தீவிரமாக ஆராய்ந்தாராம்.

அதில் த.மா.கா வோ , காங்கிரஸ் கட்சியோ அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் அந்த கட்சிகளுக்குத்தான்பலமே தவிர, அ.தி.-மு.கவுக்கு மிகவும் அ-தி-கமான -ஓட்டு கிடைக்க வழியில்லை. அதே -நரத்தில் பா.ம.கவுக்கு ,வடமாவட்டங்களில் கணிசமான அளவு ஓட்-டு வங்-கி உள்-ள-து.

40 தொகுதிகளில் பா.ம.க எந்த கட்சியோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றதோ அந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இருக்கின்றது என்று அந்த சர்வே -ரிப்போர்ட்டில் இருக்கிறதாம். -இ-து தி-மு-க-வுக்-கும் -த-ரி-யு-ம். தற்பொழுதுராமதாஸ் தி.-மு.க அணியில் தான் இருக்கிறார்.

இதற்கு நடுவே, அ.தி.-மு.கவின் ஜெயலலிதா பேரவை தலைவரும், கட்சியின் எம்.பியுமான தினகரன் மற்-றும்பா.ம.க தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணி இருவரும் சந்தித்துப்பேசி- வ-ரு-வ-தா-க அரசியல் வட்டாரங்களில்பேச்சு அடிபட்டது. இதை இரு தரப்பின-ரும் ம-றுத்-து வந்-தா-லும் சந்திப்பு நடந்தது உண்-மை என்-கின்-ற-னர். இதுஎதிர்கால அரசியல் கூட்டணிக்கான அஸ்திவாரம் தான் என்கிறார்கள்.

இலங்கைப் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும், ராமதாஸ் அ.தி.மு.கவும் இலங்கைத் தமிழர்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்துதான் இலங்கையில் தமிழர்கள் நலன் காக்கப்படவேண்டும்.இதற்கு இலங்கையில் தமிழர்களுக்காக போராடும் அனைத்து குழுக்களையும் ஒருங்கிணைத்து ஆலோசித்து,சுகமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெயலலிதா அறிக்கை விட்-டார். இந்த விஷயம் கூட எதிர்காலகூட்டணிக்கான ஒ-ரு ஒத்திகைதான் என்கிறார்கள்.

தி.மு.க தலைவர் கருணாநிதி---யா ராமதாஸ் -நம் கூட்டணியில் தொடர்ந்து இருப்பாரா, இருந்தால் எவ்வளவு சீட்கேட்பார் என்று விசாரித்தாராம். அதற்கு உளவுத்துறை அதிகாரிகள் 50 சீட் வரை கேட்பார் என்று சொல்கிறார்கள்என்று தகவல் கொடுக்க அதிர்ந்து போனாராம் கலைஞர்.

ராமதாஸின் சமீபகால போக்கும், தி.-மு.கவுக்கு தலைவலியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவு என்று விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல் ஏதாவது பேசிவிடுகிறார்கள். அவர்கள் மீதுநடவடிக்கை எடுத்தாலும், தி-முக அரசு தமிழர்களுக்கு எதிரான அரசு என்று பிரச்சனையைபெ-ரியதாக்கிவிடுவார்கள். -நடவடிக்கை எடுக்காவிட்டால் , மத்திய அரசு , எதிர்கட்சிகள் குரல் கொடுக்கும். ஏன்இப்படி சங்கடத்தில் ஆழ்த்துகிறார்கள் என்று வருத்தப்படுகிறாராம் கருணாநிதி.

1984- ம்வருடம் மதுரையில் கருணாநிதி, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மாநாடு ஒன்றை -நடத்தினார் . அந்தமா-நாட்டில் வட மாநிலங்களைச் சேர்ந்த பல அரசியல் கட்சி பிர-மு-கர்களும் கலந்து கொண்டனர். அதேமாதி-ரிகருணா-நிதி இப்பொழுதும் ஒரு மா-நாடு -நடத்தவேண்டும் என்று தனது தர்மபு-ரி மாவட்ட சுற்றுப்பயணத்தில்கோ-ரிக்கை விடுத்தார் ராமதாஸ். இப்பொழுதுள்ள - நிலையில் மிக வெளிப்படையாக பேசமுடியாத விஷயத்தைசுட்டிக்காட்டி , தர்மசங்கடத்தில் மாட்டிவிடுகிறார் என்றே -நினைக்கிறாராம் கருணா-நிதி.

மொத்தத்தில் , வருகின்ற தேர்தலில் குறைந்து -நாற்பது எம்.எல்.ஏ தொ-கு-தி-க-ளை-யா-வ-து பா.ம.கவுக்குவாங்கிவிடவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கும் ராமதாஸ் தி.மு.கவோ ,அ.தி.-மு.கவோ எந்தஅணியில் அதிக சீட் கிடைக்கிறதோ அந்த அணியுடன் தான் கூட்டணி என்பதிலும் தெளிவாகவே இருக்கிறாராம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற