For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"அப்-பு" படம் ச-ரி-யா-கப் போ-க-வில்-லை என்-ப-து என்-ன-வோ உண்-மை தான். ஆனால்,தமிழ் சினிமா உலகில் இப்பொழுது "டாக் ஆப் தி டவுன்" அப்பு தான்.

டைரக்டர் வஸந்த் இயக்கி, பால-சந்--த-ரின் கவிதாலயா தயாரித்த அப்பு படம் பற்றிஏகப்பட்ட விமர்சனங்கள். இந்த படத்தில் "மஹாராணி" என்கிற பெ-ய-ரில் அலிகேரக்-ட-ரில் வந்-து கலக்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். (சதக் என்-ற இந்-திப் பட-மும் இ-தகதை தா-னா-மே வஸந்த்??)

விருது வாங்கப்போகிறார் பிரகாஷ்ராஜ் என்கிறது தமிழ் திரையுலகம். இது பற்றிபிரகாஷ் ராஜிடமே கேட்டோம். மிகப்பொறுமையாக விளக்கம் சொன்னார். ஐந்துஆண்டுகளுக்கு முன்னால் டைரக்டர் கே.பாலசந்தர் சார் சொன்ன ஐடியாதான் இது.ஒரு படத்தில் வில்லனை அலியாக நடிக்கவைத்தால் வித்தியாசமாக இருக்கும் என்றார்.

இந்த விஷயத்தை கதையாக்கி டெவலப் செய்து டைரக்டர் வசந்த் என்னிடம் சொன்னபொழுது அதைக்கேட்டு நான் ஷாக் ஆகிவிட்டேன். ரசிகர்கள் ஒத்துக்கொள்வார்களாஎன்ற சந்தேகம் என்னுள் வந்தது. நியாயம் தான் என்றாலும் இப்பொழுது தெலுங்கு,கன்னடப்படங்களில் ஹீரோவாக நடிக்கும் என் இமேஜ் என்னாகும் என்கிறமிகப்பெரிய கேள்விக்குறி விஸ்வரூபம் எடுத்துதுக் கொண்டிருந்தது.

என் குருநாதர் டைரக்டர் கே.பாலசந்தர், எனக்கு கைட் மட்டுமல்ல காட்பாதரும் கூட.அவர் சொன்னால் நிச்சயம் எல்லாமே நன்மைக்காகத் தானிருக்கும் என்று என்னைநானே தேற்றிக்கொண்டேன்.

படப்பிடிப்பு தொடங்கிய பொழுது, அலி கெட்டப்புக்காக இரண்டு மூக்குத்தி, காதில்தோடு, பெண் போன்ற தலைமுடி பூ வைத்துக்கொண்டு வாயில் வெற்றிலை பாக்குபோட்டுக்கொண்டு, நான் நடந்து வந்தபொழுது என்னைப்பார்த்தவர்கள் எல்லோரும்ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். அதையெல்லாம் நான் கண்டுகொள்ளவில்லை.

மானசீகமாக நான் ஒரு அலியாக என்னைக் கற்பனை செய்துகொண்டேன். பலஇடங்களில் சுற்றி வேடிக்கை பார்த்த காமிரா யூனிட், உதவிஇயக்குனர்கள்கைதட்டினார்கள். பாராட்டினார்கள்.

நான் மிகவும் அன்புடன், டைரக்டர் வஸந்திடம் ஒரே ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.என்னுடைய போட்டோவை, விளம்பரத்திற்காக பயன்படுத்தவேண்டாம் . ரிலீஸாகிறநிேரத்தில் மட்டும் வெளியிடுங்கள். இல்லாவிட்டால் மஹாராணி என்று எனக்குபட்டப்பெயர் வைத்துவிடுவார்கள் என்றேன்.

உண்மையைச் சொல்வதென்றால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எனக்குகிடைத்த வாய்ப்பை நான் பெருமையாக நினைக்கிறேன். ரசிகர்கள் என் பாத்திரத்தைஏற்றுக்கொண்டார்கள். எனக்குக் கிடைக்கும் பெயரும் புகழும் என் குருநாதர்பாலசந்தருக்கே சொந்தம் என்றார் பிரகாஷ்ராஜ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X