For Daily Alerts
தமிழகத்தில் இன்று
சித்த மருத்துவத்தின் தரத்தை மேம்படுத்த கருத்தரங்கம்
சென்னை:
சித்தா மருத்துவத்தின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஜூலை 15 ம் தேதி சித்த மருத்துவத்தின் எதிர்காலம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சென்னையில்நடக்கவுள்ளது.
இக் கருத்தரங்கத்தில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள். இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கருத்தரங்கில் 85 ஆய்வுத் தாள்கள்சமர்ப்பிக்கப்படும்.
இதைத் தவிர அரசு மியூசியத்தில் வரும் 12 முதல் 14 ம் தேதி வரை மூலிகை கண்காட்சி நடக்கவுள்ளது. கண்காட்சியில் 250 வகை மூலிகைகளும், உலர்ந்தமூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் இடம்பெறும்.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!