For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சென்னை, விஜயகாந்த் இல்லம் குதூகலம் நிறைந்திருந்தது. சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களும் குழந்தைகளும் நிறைந்திருந்தனர். ஒவ்வொருவருடமும் மாவட்டங்கள் வாரியாக மொத்தம் முப்பது லட்சம் ரூபாய்வரை குழந்தைகள் படிப்பிற்காக பல உதவிகளைச் செய்யும் விஜயகாந்த், இந்தமுறை கூடுதலாக பத்து லட்ச ரூபாயை குழந்தைகள் , மாணவ மாணவிகளின் நலனுக்காக ஒதுக்கியிருக்கிறார்.

பள்ளிகளுக்கான , ரூபாய்களை பெறுவதற்காக ஆசிரியர்களும் குழந்தைகளும் வந்திருந்தனர். அவர்களுக்கான காசோலைகளை மனைவியுடன் சேர்ந்துவழங்கிவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவி செய்வதற்கு அடிப்படையில் சில காரணங்கள் உண்டு. திறமையான மாணவர்கள் வீணாகி விடக்கூடாது. எனக்குபடிக்க எல்லாவசதிகளும், வாய்ப்புகளும் இருந்தது. ஆனால் நான் சினிமா ஆசையில், பத்தாம் வகுப்புக்கு பிறகு படிப்பைத் தொடர முடியாமல் நடிகனாகிவிட்டேன். ஒரு வேளை படித்திருந்தால் நான் வேறு ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் இன்று இந்த நிலை கிடைத்திருக்காது. உதவி செய்ய ஒரு வாய்ப்புஅதைச்செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான் என்று மிக எளிதாக சொல்லிக் கொள்கிறார் விஜயகாந்த்.

இன்டியாஇன்போ.காமிற்கு அவர் அளித்த ஸ்பெஷல் பேட்டி:

என்னிடம் உதவிபெற்று படித்த மாணவர்கள் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று ஆகியிருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அவர்கள் அடிக்கடி என்னைவந்து சந்திப்பதும் உண்டு. அவர்களை சந்திக்கும்பொழுதெல்லாம் இன்னும் இன்னும் நிறைய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அந்தஉதவிகளைச் செய்ய என் மனைவியும், உறவினர்களும் எதிர்ப்பு இல்லாமல் ஊக்கம் கொடுக்கிறார்களே அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

ஏழை மாணவர்களுக்கு உதவி, இதுமட்டுமில்லாமல் உதவி என்று வருகிறவர்களுக்கு , அவர்களை நிறைவாக அனுப்புவது. இப்பொழுது உதயமாகியுள்ளரசிகர்மன்றக்கொடி , உங்களுடைய கிராமப்புற சுற்றுப்பயணங்கள் இப்படி எல்லாவற்றையும் கூட்டி கழித்துப்பார்த்தால் நீங்கள் அரசியலுக்குஅடிபோடுகின்ற மாதிரி தெரிகின்றதே.?

நான் சினிமா தொழிலுக்கு வருவதற்கு முன்பே பலருக்கு உதவிகள் செய்திருக்கிறேன். நடிப்புத் தொழிலுக்கு வந்த பின்பு உதவி செய்வதற்கென்றே என்வருமானத்தில் கொஞ்சம் தொகையை ஒதுக்கி வைத்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றேன். நான் நடிப்புத் துறைக்கு வந்த பின்பு அதற்காக என்வருமானத்தில் கொஞ்சம் தொகையை ஒதுக்கிவைத்து தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறேன்.

நான் சினிமாவிற்கு வந்த நாள் முதல் என் பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவும் நாளாக கொண்டாடி வந்தேன். இப்பொழுது இலங்கைத் தமிழர்களின்பிரச்சனையினால், அங்குள்ள தமிழர்கள் மிகவும் துன்புறுத்தப்படுவதால் என் பிறந்தநாளை கொண்டாடுவதை நிறுத்திக் கொண்டுள்ளேன். ஆனால் செய்து வந்தநற்பணிகளை மட்டும் செய்து வருகின்றேன்.

அரசியலில் சேர்ந்துதான் ஏழைகளுக்கு உதவ முடியும் என்பதில் நான் மாறுபடுகின்றேன். ஒரு தனிமனிதனாக நின்றும் அந்த உதவிகளை ஏன்செய்யக்கூடாது. நான் சினிமாவுக்கு வந்த நாள்முதல், அரசியலுக்கு அடித்தளம் அமைப்பேன் என்று எழுதி வருகிறார்கள். பேசியும் வருகிறார்கள்.

நிச்சயமாக நான் அரசியலுக்கு வரமாட்டேன். தயுவு செய்து இந்தக் கேள்வியை இனிமேல் என்னிடம் கேட்காதீர்கள். நான் அரசியலுக்குஎந்தச்சூழ்நிலையிலும் உறுதியாக வரமாட்டேன்.

கலைஞர் அவர்களின் தமிழ் எனக்குப்பிடிக்கும், உலகிலுள்ள எல்லா தமிழர்களுக்கும், குரல் கொடுத்துவரும், தமிழ் இனத்தலைவர் என்பதால் கலைஞரை நான்நேசிக்கிறேன். அதனால் நான் தி.மு.க ஆதரவாளன் என்று நினைக்கிறார்கள். என் நண்பன் இப்ராஹிம் ராவுத்தர் காங்கிரஸ் அனுதாபி, அவருடன் தலைவர்மூப்பனாரையும் இன்னும் பிற தலைவர்களையும் நான் சந்திப்பதுண்டு. இப்படிப் பார்த்தால் எல்லாக் கட்சியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். நான்எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியலில் குதிக்க மாட்டேன்.

நடிகர் சங்கத் தலைவராக புதிய பொறுப்பேற்று உங்களின் பொறுப்புகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதற்கு ஏதாவது பின்னணி உண்டா?

நிச்சயமாக. நண்பர் ராதாரவி வில்லனாகவும் சின்னச்சின்ன குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பவர். சில தர்மசங்கடமான இடங்களில் என்னுடைய பேச்சுஎடுபடுவதில்லை. அதனால் உன் போன்ற ஹீரோ யாராவது நடிகர் சங்கத்தலைவராக பொறுப்பேற்க வந்தால் நான் தலைமைப் பதவியை விட்டுக்கொடுகத் தயார் என்று பலமுறை சொல்லிவந்தார்.

அதோடு மதிப்பிற்குய என்.எஸ்.கிருஷ்ணன் - எம்.ஜி.ஆர், சிவாஜி , எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் கட்டிக் காப்பாற்றிய , நடிகர் சங்கம் கடனில்இருக்கிறது. இந்தக் கடனை அடைக்க வேண்டும், அதற்கு என்ன வழி புதியவர்கள் பதவி ஏற்கவேண்டும் என்பது பலரது ஆசை . இப்படி ஒருஇக்கட்டான நிலை உருவாகிவிட்டது. இந்த தலைமைப் பதவியை ஏற்றாக வேண்டிய ஒரு கட்டாயம். நான் சரத்குமார் , ராதிகா , குஷ்பூ , மற்றும்நெப்போலியன் , பார்த்தீபன் , முரளி போன்ற பலரும் தீவிரமாக இறங்கியுள்ளோம்.

இதில் முன்னாள் தலைவர் ராதாரவியும் இன்னும் சிலரும் எங்களுக்கும் சில பொறுப்புகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.பழையவர்கள் யாரும் வரக்கூடாது. ராதாரவியும், காளை என்பவரையும் எதிர்த்து விசுவும் , எஸ்.வி.சேகரும் போட்டியிடப் போவதாகமுடிவெடுத்தார்கள். அதனால் தேர்தலை தவிர்க்கமுடியவில்லை. இந்த பொறுப்பு என்னைப்பொறுத்தவரை முள்கிரிடம் தான்.

தயாரிப்பாளர் ஹென்றிக்கும், நடிகர் முரளிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்த்து முரளி இன்று முதல் கண்ணுக்கு கண்ணாக படத்தின் டப்பிங்பேசப்போகிறார். நான் வெளிப்புறப்படப்பிடிப்புகளுக்குப் போகிற போது, இப்படிப் பிரச்சனைகள் வந்தால் , நண்பர்கள் நெப்போலியன், பார்த்தீபன்,போன்றவர்கள் நிச்சயம் எனக்கு கைகொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

கண்ணுபடப்போகுதய்யா, வானத்தைப்போல, வல்லரசு என்று தொடர் வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு நடிகனுக்கு தான் நடித்த படம் வெற்றி அடையும் பொழுது அவன் பட்ட கஷ்டங்களெல்லாம், மறந்து போய் சந்தோஷத்தின் எல்லைக்கேசென்றுவிடுவான். வெற்றியும் , தோல்வியும் சகஜமான இந்த சினிமா உலகில் தொடர் வெற்றி எனக்கும், என் ரசிகர் மன்றத்துக்கும்மகிழ்ச்சியைக்கொடுக்கிற செய்திதான். ஆனால் ஏதேச்சையாக ரசிகர் மன்ற கொடியை உருவாக்கியதற்கும், இந்த தொடர் வெற்றிகளுக்கும்தொடர்பு கிடையாது. நீண்ட நாட்களாக மன்றத்தினர் கேட்டு வந்த விஷயம் இப்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது.

நீங்கள் இவ்வளவு தூரம் வளர்ந்த பின்னும் புதிய டைரக்கடர்களுக்கு வாய்ப்புக்கொடுத்து வருகிறீர்களே, பெரிய டைரக்டர்கள் என்றால் அதிக சம்பளம்கேட்பார்கள் என்பதாலா?

இப்படித்தான் பலரும் நினைக்கிறார்கள். பணம் சம்பாதிக்கிற ஆசை எனக்கு இருந்திருந்தால் என் நண்பன் இப்ராஹிம் ராவுத்தர் பேனரில் பிரபலமானமுன்னணி டைரக்டர்களுக்கு வாய்ப்புக்கொடுத்து ரிஸ்க் இல்லாமல் படம் பண்ணி காசு பண்ணிவிட முடியும். ஆனால் வானத்தைப்போல படத்தைத்தவிர,கண்ணுபடப்போகுதய்யா , வல்லரசு, லேட்டஸ்டா வரப்போகிற சிம்மாசனம் வரை எல்லா டைரக்டர்களுமே புதியவர்கள்.

சிம்மாசனம் படத்தை இயக்கும் இயக்குநர் ஈஸ்வரனுக்கு இது தான் முதல் படம். ஒரு வித்யாசமான படம், படத்தில் ஒரு தந்தைக்கு இரண்டு தாய். இரண்டுமகன்கள். தந்தை இரண்டு மகன்களாக மூன்று வேடத்தில் நடிக்கிறேன். வித்யாசமான படம். ஜென்மப் பகையாளிகளான அண்ணனும், தம்பியும் தன்தந்தையை கொன்றவனை பழிவாங்குவதற்காக இணைகிறார்கள்.

அடுத்து , ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வாஞ்சிநாதன். ஒரு போலீஸ் அதிகாரியின் கதை. இது மிகவும் வித்யாசமானதாக இருக்கும் என்றுபேசிக்கொண்டிருந்தவர் வெளியே காத்துக்கொண்டிருந்த கூட்டத்தைக் பார்த்துக் கிளம்பினார். பள்ளி ஆசிரியர்களும், குழந்தைகளும் சூழ்ந்துகொள்ள. அந்தவல்லரசு அவர்கள் மத்தியில். ஒவ்வொருவரின் முகத்திலும் தான் எவ்வளவு சந்தோஷம் .

கண்ணுபடப்போகுதய்யா..சின்னக்கவுண்டரே..

உனக்கு சுத்திப்போட வேணுமய்யா சின்னக்கவுன்டரே..

என்கிற வரிகளை மனம் ஏனோ அங்கே முணுமுணுத்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X