For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கோவையில் அக்ரி இன்டக்ஸ்-2000 கண்காட்சி

கோவை:

கோவையில் ஆகஸ்ட் மாதம் "அக்ரி இன்டக்ஸ்-2000 கண்காட்சித் துவங்குகிறது.

நான்கு நாள் நடக்கும் இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் ( கொடீசியா) இணைந்து இந்தகண்காட்சியை நடத்துகிறது.

கோவையில் வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கண்ணையன் இதுகுறித்து கூறியதாவது:

மிகவும் பழமையான முறையிலேயே விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் நிலைமாற வேண்டும். விவசாயிகள் தற்போது வெளிவந்துள்ள புதிய தொழில்நுட்பங்களைப்பயன்படுத்த வேண்டும்.

உற்பத்தியைப் பெருக்கவும், இயற்கை வளங்களை எளிதாகப் பெறவும் இந்தக்கண்காட்சி உதவும். மேலும், விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை ஏற்றுமதிசெய்யும் வழிமுறைகளும் இந்தக் கண்காட்சியில் விளக்கப்படும்.

அடுத்த மாதம் துவங்கும் இந்தக் கண்காட்சியை கோவை மாவட்ட சிறுதொழில்கள்சங்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் இணைந்து நடத்துகிறது. இந்தக்கண்காட்சி தொழில் வர்த்தகக் கண்காட்சி மையத்தில் நடக்கிறது.

இக்கண்காட்சியில் புதிய பல நவீனத் தொழில்நுட்பங்கள் இடம் பெறுகின்றன. உயிர்உரங்கள், நோய் எதிர்ப்பு எதிர் உயிரிகள், வீரிய ரக விதைகள், மலர்த் தோட்டங்கள்அமைத்தல், வீணாண பொருட்களை எருவாக மாற்றுதல், போன்ற பல்வேறுவகையான நவீனத் தொழில் நுட்பங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெறுகின்றனஎன்று அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X