தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் ஆக.15 க்குள் இன்டர்நெட் வசதி: பாஸ்வான்

டெல்லி:

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் இன்டர்நெட் வசதிசெய்து தரப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.

மைசூரில் நடைபெற்ற மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர்பேசியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இன்டர்நெட் வசதியும், 6 ஆயிரம் வட்டத் தலைநகரங்களில்தொலைபேசி வசதியும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் செய்து தரப்படும்.

தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திராவில் உள்ள அனைத்து கிராமங்களிலும்அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பொதுத் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும்.

இந்தியாவில் 6,07,491 கிராமங்கள் உள்ளன. இவற்றில் 3,74,605 கிராமங்களுக்கு ஏற்கெனவே தொலைபேசி வசதிசெய்து தரப்பட்டுள்ளன. மீதமுள்ள கிராமங்களுக்கு வரும் 2002-ம் ஆண்டுக்குள் இவ் வசதி செய்து தரப்படும்.

2,11,000 கிராமங்களில் உள்ள பழைய டெலிபோன்கள் மாற்றப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுக்குள் புதிய, நவீனதொலைபேசிகள் வழங்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள வட்டத் தலைநகரங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் இன்டர்நெட் வசதி செய்து தரமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து கிராமங்களுக்கும் தொலைபேசி வசதி செய்து தரப்படுவதுடன் இன்டர்நெட் வசதியும் செய்துதரவேண்டும் என்ற நோக்கில்தான் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்தநடவடிக்கைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவமும், முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது என்றார் பாஸ்வான்.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...