For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

திடீர் வருமான வரி சோதனையின் அதிரடி பின்னணி

டெல்லி:

டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை கிரிக்கெட் வீரர்களின் வீடுகளில் நடந்த திடீர் வருமான வரிச் சோதனை, மிகவும்திட்டமிட்டு, அதி ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை துவங்கிய இந்த வருமான வரிச் சோதனை வெள்ளிக்கிழமை வரை நீடித்தது. டெல்லியில் ஜந்தாவாலன் பகுதியில் அமைந்துள்ளவருமான வரித் துறை தலைமை அலுவலகத்தில் காலையிலிருந்தே ஒரு விதமான பரபரப்பு நிலவியது.

கார்களும், வேன்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. உயர் நிலை அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை 300க்கும் மேற்பட்டவர்கள்திரண்டிருந்தனர். அனைவரது முகத்திலும் ஒரே கேள்விதான் நடமாடிக் கொண்டிருந்தது. எங்கே செல்கிறோம் என்பதுதான் அது.

டெல்லி தவிர மும்பை, கல்கத்தா,பெங்களூர், சண்டீகர், பாட்டியாலாவிலும் இதே நிலைதான். எங்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் தயார் நிலையில்இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டிருந்தனர். அவர்களும் கேள்விக் குறியுடனேயே காத்திருந்தனர்.

இந்த நிலையில், சஸ்பென்சின் அடுத்த கட்டமாக, காலை 7.45 மணிக்கு டெல்லி அலுவலக மாநாட்டு அரங்கத்துக்கு புலனாய்வு பிரிவு அதிகாரி வந்தார்.அவர் வரும் முன்னே உயர் அதிகாரிகள் தலைமையில் தனித் தனியாக சோதனைக்குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

10 நிமிடம் கழித்து அனைவரது கைக் கடிகாரங்களிலும் நேரத்தை ஒரே மாதிரியாக நேரத்தை செட் செய்து கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. குழுதலைவர்களாக இருந்தவர்களிடம் ஒவ்வொருவரிடமும் சீல் வைக்கப்பட்ட கவர் கொடுக்கப்பட்டது.

அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கவரின் மேல் அவர்கள் சோதனை நடத்த எங்கு செல்ல வேண்டும் என்ற விவரம் மட்டும் இருந்தது. வேறு எந்தத்தகவலும் அதில் இல்லை. மற்ற நகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களுக்கும் இதே போல் தகவல்கள் உடனடியாக அனுப்பப்பட்டது.

அதிகாரிகள் தங்கள் குழுக்களுடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும் 8.30 மணிக்கு கவரை பிரித்து முகவரியைப் பார்த்துஅதில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டிற்கு மின்னல் வேகத்தில் சென்று முற்றுகையிட்டு சோதனைக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டது.

8.30-க்கு கவர் பிரிக்கப்பட்ட பின்புதான் அனைவருக்கும் தாங்கள் சோதனையிடப் போவது இந்தியாவின் தற்போதைய முன்னாள் கிரிக்கெட் வீரர்களின்வீடுகள் என்று. சோதனை செய்யப்பட்ட வீரர்களின் வீடுகள் விவரம்:

36, சுந்தர் நகர், டெல்லி (கபில் தேவ்), மும்பை பந்த்ராவில் வசிக்கும் அசாருதீனின் ஆடம்பர வீடு. இவர் வீடு பூட்டப்பட்டிருந்ததால் பூட்டு உடைத்துவீடு திறக்கப்பட்டது. பாட்டியாலாவில் உள்ள சித்துவின் வீடு.

அகமதாபாத்தில் உள்ள கபில் தேவின் உயிர் நண்பர் ஹரன் ஹாத்தி வீடு.

சண்டிகரில் உள்ள கபில்தேவின் நட்சத்திர ஓட்டலும் தப்பவில்லை.

ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு சாட்சிகள் வைத்து அவர்கள் முன்னால் சோதனை நடத்தப்பட்டது. வருமானத்துறை வரவலாற்றிலேயே இது போன்றபிரம்மாண்டமான சோதனை நடைபெறுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. அன்று மாலையில் குழுவின் தலைவர்கள் இயக்குனரைச் சந்தித்துசோதனை குறித்த விவரங்களை தெரிவித்தனர்.

இந்த சோதனையின் பலன்கள் விரைவில் தெரியவரும் போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கலாம். காத்திருப்போம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X