For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களை "அள்ளிக் கொண்டு போக இஸ்ரேல் திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

ஜெருசலேம்:

விமானம் மூலம் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜீனியர்களை "அள்ளிக் கொண்டு வர இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகஅந்நாட்டுப் பத்திரிகைகளில் வந்துள்ள செய்தியை இஸ்ரேல் மறுத்துள்ளது.

இதற்காக இஸ்ரேலின் ஈ1ஏ1 விமானம் தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள செய்தியையும் அது கடுமையாகக் கண்டித்துள்ளது. இது சுத்தமுட்டாள்தனமான செய்தி என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேல் சாப்ட்வேர் தொழில் கழகத்தின் செயலாளர் அம்னான் லீபோவிட்ஸ் கூறுகையில், இது பொய்யான செய்தி. இதுபோன்றெல்லாம் சாப்ட்வேர்என்ஜீனியர்களைக் கூட்டிக் கொண்டு வருவது கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. இது மாதிரி செய்யவும் முடியாது என்றார்.

ஆனால், இஸ்ரேல் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த வேண்டுமானால் வெளிநாடுகளிலிருந்து சாப்ட்வேர் என்ஜீனியர்களை கூட்டிக் கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை என்று சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட்டுள்ள ஹர் என்பவர் கூறுகிறார்.

ஹர் கூறுகையில், வெளிநாட்டு சாப்ட்வேர் என்ஜீனியர்களை பெரிய அளவு இஸ்ரேலுக்குக் கூட்டி வரும் எண்ணத்தை அரசு நிராகரித்து விட்டது. ஆனால் இதுதவறு. அப்படிச் செய்யாவிட்டால், இஸ்ரேலில் தகவல் தொழில்நுட்பத் துறை பாதிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், இஸ்ரேல் பல்கலைக்கழகங்களில் எலக்ட்ரிகல் என்ஜீனியரிங் படிப்புகளுக்கு அரசு அதிக ஆதரவு தர வேண்டும் என்றுபிரதமர் அலுவலக இயக்குநருக்கு மனு கொடுத்துள்ளோம். இதன் மூலம், நமது நாட்டிலேயே அதிக பட்டதாரிகளை உருவாக்க முடியும் என்றார்.

இஸ்ரேலில் தற்போது 10,000 எலக்ட்ரானிக் என்ஜீனியர்கள் உள்ளனர். இது அவர்களது தேவைகளுக்குப் போதுமானதாக இல்லை. குறைந்தது ஒருஆண்டுக்காவது, 1000 வெளிநாட்டு என்ஜீனியர்களாவது தேவை என்ற நிலை இப்போது உள்ளது. இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளின் உதவியும்இதற்குத் தேவைப்படுகிறது என்றார் ஹர்.

முன்னதாக, இஸ்ரேல் விமான நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி பெங்களூருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்,அவர் இந்திய சாப்ட்வேர் என்ஜீனியர்களைஇஸ்ரேலுக்கு அழைத்துச் செல்வது தொடர்பான வழிமுறைகளைக் கூறி வருவதாகவும் இஸ்ரேல் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்தியாவிலிருந்து இஸ்ரேல் வர விரும்பும் இந்திய என்ஜீனியர்களின் வசதிக்காக, மும்பையிலிருந்து டெல் அவிவ் நகருக்கு வாரம் மூன்று முறைவிமானங்கள் இயக்கப்படும் என்றும் நாளடைவில் இது தினசரி விமானமாக மாற்றப்படும் என்றும் பத்திரிகைச் செய்திகளில் கூறப்பட்டிருந்தது.

தற்போது பெங்களூரில் பல இஸ்ரேல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களது நிறுவனங்கள் குறித்த தகவல்களை வழங்கும் மையங்களை துவக்கியுள்ளனர்என்று இஸ்ரேல் விமான நிறுவன துணை இயக்குநர் ஊரி சிர்கிஸ் கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X