For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"டை" ஆனது 2-வது உள்ளரங்கு ஒருநாள் கிரிக்கெட்

By Staff
Google Oneindia Tamil News

கே: வரப்போகிற தமிழக சட்டசபைத் தேர்தலில், ஜனதா கட்சி 50 தொகுதிகளில்போட்டியிடும் என்று சுப்ரமண்யம் சுவாமி கூறியிருப்பது பற்றி...?

ப:எந்தக் கூட்டணியிலும் இடம் கிடைக்காது என்று தீர்மாணித்து விட்டார் போலிருக்கிறது.

கே: பேனாவால் எதையும் சாதிக்க முடியுமா?

ப: செக் கில் கையெழுத்து இடுகிற பேனாவினால், எதையும் சாதிக்க முடியும் என்பது உண்மையே.

கே: இவரை மாதிரி வரணும் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டுப் பார்த்த அனுபவம் உண்டா?

ப: வீரப்பனைப் பார்த்தும் கூட எனக்கு இப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டதில்லை. அப்படியிருக்க, மற்ற சாதாரண மனிதர்களைப் பார்த்து, நான் இப்படிநினைப்பேனா?

கே: வீரப்பன் கோரிக்கையை ஏற்று தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கூடாது என்ற டாக்டர். ராமதாசின் அறிக்கையைப் பற்றி....?

ப: ஆச்சரியமாக இருந்தாலும், ராமதாஸ் இப்படிப் பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. பா.ம.க.வில் சில தீவிரவாதிகள் புகுந்திருக்கின்றனர் என்றபேச்சு முன்பு கூறப்பட்டது.

அப்படி பா.ம.க.வில் புகுந்து , ராமதாசுக்கு ஏதாவது இடைஞ்சலைத் தோற்றுவித்தவர்கள் இந்த மன்னிப்புப் பட்டியலில் இடம் பெறுகிறார்களோ,என்னவோ தெரியவில்லை. அவருடைய இந்தப் பேச்சு வரவேற்கத்தக்கதே.

கே: ஹிஸ்புல் முஜாஹிதீனுடனான பேச்சு வார்த்தை தோல்விக்குப்பின், ஸ்ரீநகரில் நடந்த கார் குண்டு வெடிப்பில், புகைப்பட நிபுணர் உட்பட 15 பேர் பலியானது பற்றி...?

ப: மீண்டும் கொடூரம் நடந்திருக்கிறது. இதை நிகழ்த்தியவர்கள் பேச்சு வார்ததைக்கு அருகதை படைத்தவர்கள் அல்ல. நசுக்கப்பட வேண்டியவர்கள்.

கே: கோவையில் சோனியா காந்தியின் பொதுக் கூட்டத்திற்கு கூடிய கூட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ப: நல்ல கூட்டம் என்று தெரிகிறது. இது சோனியா காந்தியைப் பார்க்கும் ஆசை மக்களுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகிறதா - அல்லதுகாங்கிரசுக்கு மக்கள் ஆதரவு கொஞ்சம் கூடுகிறது என்பதைக் காட்டுகிறதா - என்பது போகப் போகத்தான் தெரிய வேண்டும்.

கே: பக்தி என்ற பெயரில், மொட்டைத் தலையில் தேங்காய் உடைப்பதைப் பற்றி... நீங்கள் இதை ஆதரிக்கிறீர்களா?

ப: எல்லா மொட்டைத் தலைகளிலும் தேங்காய் உடைப்பேன் - என்று பக்தர்கள் கூறாத வரையில், எனக்கு ஆட்சேபனை இல்லை.

கே: தமிழ் எழுத்துக்களில் மாற்றம் ஏற்பட்டு வருடங்கள் பல ஆகி விட்டன ; இன்றைய தலைமுறையினருக்கு பழைய எழுத்துககளைப்பற்றி தெரிந்திருக்கவாய்ப்பு இல்லை ; இந்த நிலையில் விடாப்பிடியாக பழைய எழுத்துக்களையே நீங்கள் பின்பற்றுவது ஏன்?

ப:பழைய எழுத்துதான் எனக்குப் பழக்கம் ஆகியிருக்கிறது. அரசு ஆணையிட்டு இப்படி எழுது என்று சொல்வது சரியல்ல என்ற எதிர்ப்பும் என் மனதில்தோன்றியது.

இப்போது அரசு ஆணையில்லை ; எனக்குப் பல பத்திரிக்கைகளை படித்து புதிய எழுத்துடன் கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது ; ஆகையால் இனி நாமும்ஊரோடு ஒத்துப் போகலாம் என்ற எண்ணம் எனக்கே ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. நல்ல நாள் பார்த்து மாற்றம் செய்ய வேண்டியதுதான்.

கே: மற்ற கட்சிகளின் ஆட்சிகளைப் பார்த்து விட்ட தமிழக மக்கள், பா.ம.க. வின் ஆட்சியையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றுராமதாஸ் கூறுகிறாரே?

ப: தலைக்கு மேல் போன பிறகு, ஜாண் போனால் என்ன, முழம் போனால் என்ன- என்று மக்கள் நினைப்பார்கள் என அவர் நம்புகிறார்.இன்னமும் அந்த நிலைமை வரவில்லை.

கே: அதர்மம் தலை தூக்கும் போது, அவதரிப்பதாகச் சொன்ன இறைவன், இன்னும் தாமதிப்பது ஏன்?

ப: அதர்மத்தை அழித்து நல்லவர்களைக் காப்பதாகக் கூறியுள்ள இறைவன், நல்லவர்கள் தோன்றுவதற்காகக் காத்திருக்கிறான்.

கே: பெண்களே பெண்களுக்கு பெரிய எதிரியாக இருப்பது ஏன்? (மாமியார் - மருமகள்)

ப: தானே தனக்கு எதிரியாக மாறிவிடுகிற ஆண்களை விட இது ஏவ்வளவோ மேல் அல்லவா? ( பிரம்மச்சாரி - கல்யாணம் ஆனவர்)

கே: வீரம் காட்டும் நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளாரே?

ப: நேரம் வந்திருக்கலாம். இடம் சரியில்லை. அ.இ.அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் போது. வீரம் காட்டுவது தற்கொலைக்கு ஒப்பானது.

கே: தாங்கள், தங்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளும்படி நேர்ந்தால் - என்ன செய்வீர்கள்?

ப: நான் மிதவாதி - பிய்த்துக் கொள்ள மாட்டேன் - தடவிக் கொள்வேன்.

கே: டாக்டர்.ராமதாஸ், டாக்டர். கிருஷ்ணசாமி, டாக்டர்.சேதுராமன் - இவர்கள் மூவரும் தங்களின் மருத்துவத் தொழிலை ஒதுக்கி வைத்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ளது பற்றி...?

ப: மற்ற நோயாளிகளைப் பார்த்தாகி விட்டது, மன நோயாளிகளையும் பார்ப்போம் - என நினைத்து அரசியலில் முனைகிறார்களோ என்னவோ?

கே:பல ஆண்டுகளுக்குப் பின் நடந்த தங்கள் நாடகத்திற்கு, வரவேற்பு எப்படி இருந்தது? இனி வெளி மாநிலங்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா?

ப: மிக நல்ல வரவேற்பு இருந்தது. முன்பு எப்படி ரசனை கிட்டியதோ, அதே போன்ற ரசனை கிட்டியது. மக்கள் ரசனை மாறிவிடவில்லை என்ற தெம்பைஅளித்தது. வெளி மாநிலங்களில் நாடகம் நடத்துவது பற்றி இன்னமும் தீர்மானிக்வில்லை.

கே: ஒரு குற்றவாளி பொது மன்னிப்பு பெற என்ன தகுதி வேண்டும்?

ப:ஒரு தகுதியும் வேண்டாம். - அவனைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் அருகதை அரசுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். அது போதும்.

கே: தாங்கள் இப்போது போட்ட 2 நாடகங்களுக்கும் நல்ல வரவேற்பாமே? ஆகவே தங்களுக்கு நல்ல வருவாய் என்று கூறலாமா?

ப: நாடகத்தின் மூலம் எனக்கோ, எங்கள் குழுவில் வேறு யாருக்கோ எந்த வருவாயும் கிடையாது. திருப்திதான் உண்டு.

கே: துக்ளக் படித்தால் தலை முடி கொட்டும் என்று என் நண்பன் பயமுறுத்துவது பற்றி...?

ப: துக்ளக் என்ன ஹேர் கட்டிங் சலூனா?

கே: நேரடியாகக் கேட்கிறேன்,பெண்கள் ஆண்களுக்கு அடிமையா?

ப: எஜமானர்கள் அடிமைகளாவதில்லை.

கே: ஹிஸ்புல் முஜாஹிதீனின் போர் நிறுத்த அறிவிப்பு வாபஸ் - இந்திய அரசுக்கு ஒரு பாடமா, தோல்வியா?

ப: சறுக்கல். ஆனால் சமாதானத்திற்காக எவ்வளவோ நாங்கள் விட்டுக் கொடுத்தும் கூட, பாகிஸ்தான் தலையீட்டினால், எங்களுடைய நல்லஎண்ணம் ஈடேறாமல் போய்விட்டது என்று கூறி சர்வதேச அரங்கில் -முக்கியமாக அமெரிக்காவிடம் - ஆதாயம் பெறுவதற்கு,நமக்குவாய்ப்பளிக்கிற சறுக்கல்.

கே: கர்நாடக முன்னாள் முதல்வரும், சுதந்திர் போராட்டத் தியாகிகளில் ஒவருமான நிஜலிங்கப்பாவின் மறைவு குறித்து...?

ப: இந்திரா காந்தியின் கை ஓங்கிய போது, அவருடைய செல்வாக்க்ை கண்டு மிரண்டு, அவர் பக்கம் போய் நிற்காத காங்கிரஸ் தலைவர்கள் சிலர்தான்.அவர்களில் ஒருவர் நிஜலிங்கப்பா. பொது வாழ்வில் முக்கியத்துவம் அளித்த தலைமுறையைச் சார்ந்தவர்.

கே: முன்பை விட அதிக சுதந்திரத்துடன் இருப்பதாகக் கூறும் ராமஜெத்மலானி பற்றி..?

ப: சரி. எதையாவது சொல்லி மனதைத் தேற்றிக் கொண்டால் நல்லதுதான்.

கே: குற்றவாளியை (வீரப்பனை) கதாநாயகனாக்குவாதா? என்று வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிரடிப்படை தலைவர் ஹரிகிருஷ்ணாவின்மனைவி ப்ரீதா ஹரிகிருஷ்ணா கேட்டுள்ளது பற்றி...?

ப: இப்படிக் கேட்பவர்களிடம், தமிழ்த் தீவிரவாதம் இல்லை என்பதால், தமிழக முதல்வர், அவர்களுடைய பேச்சிற்கு முக்கியத்துவம் அளிக்கமாட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X