For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய ராணுவ உதவியை நாட மாட்டோம் -என்கிறார் செளத்ரி

By Staff
Google Oneindia Tamil News

ரோதக் (ஹரியானா):

இந்தியாவிடம் ராணுவ உதவி கேட்க மாட்டோம் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஜிமுன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரி கூறியுள்ளார்.

மகேந்திர செளத்ரி, இந்தியாவுக்கு 10 நாள் பயணமாக வியாழக்கிழமை இரவு ஹரியானாவந்தார். அவருக்கு அங்கு பாரம்பரிய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது செளத்ரி கூறியதாவது:

இந்திய மக்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பிஜியில் மீண்டும் ஜனநாயக ஆட்சிமலர உதவ வேண்டும் . அதற்காக ராணுவ உதவியைக் கோர மாட்டோம்.

நான் பல நாடுகளுக்கும் சென்று மீண்டும் பிஜியில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தஅவர்களது உதவியைக் கோரவுள்ளேன்.அவர்களிடம் பிஜியில் உண்மையில் என்னநடந்தது எனவும் எடுத்துரைக்கப போகிறேன்.

பிரதமர் வாஜ்பாயையும் மற்றும் பிற தலைவர்களையும் டெல்லியில் சந்தித்து பிஜியில்ஜனநாயக ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த உதவி கேட்க உள்ளேன்.

பிஜியில் உள்ள ராணுவத்தினரில் 99 சதவீதம் பேர் பிஜி இனத்தவர்கள் அதனால்தான்அவர்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது அரசைக் கலைக்க முடிந்தது.எனது அரசு கலைக்கப்பட்ட போது மொத்தம் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பிக்களில்57 பேர் எனது அரசை ஆதரித்தனர்.

பிஜி எனது தாய்நாடு. எனவே அங்கு நீதியை நிலை நாட்டும் என் போராட்டம் தொடரும்.

புரட்சிக்காரர்கள் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் கைது செய்யப்பட்டாலும், புரட்சிக்காரர்கள்ராணுவத்தை எதிர்த்து போராடி வருவதால் அங்கு போர் நிலவுவது போன்ற சூழ்நிலையேநிலவி வருகிறது என்றார் செளத்ரி.

முன்னதாக, ஹரியானாவிலுள்ள மகரிஷி தயானந் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிசெளத்ரியை கெளரவித்தது. அதைப் பெற்றுக் கொண்ட செளத்ரி,

எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது மகிழ்சிக்குரியது. ஆனால் இது நான் மகிழ்ச்சியாகஇருந்த காலத்தில் கிடைத்திருந்தால், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இன்னும்மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

ஹரியானா மக்கள் என் மீது காட்டும் பாசத்தையும அன்பையும் பார்க்கும் போது எனதுசொந்த நாட்டில் இருப்பது போல் உணர்கிறேன். ஒரு கணம் நான் எனது சொந்ததொகுதியில் இருப்பது போல் உணர்வு ஏற்படுகிறது என உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

செளத்ரிக்கு ஹரியானா முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா பாரம்பரிய முறைப்படிசெளத்ரிக்கு டர்பன் அணிவித்தார், செளத்ரியுடன் அவரது மனைவி ஹன்னா ஐரிஸ் விர்மதிசெளத்ரியும் வந்திருந்தார்.

இந்த மாதம் 21-ம் தேதி முதல் மூன்று நாட்கள் செளத்ரி சிம்லாவில் தங்கவிருக்கிறார்.அப்போது இமாசல பிரதேச ஆளுனர் விஷ்ணு காந்த் சாஸ்திரியையும் முதல்வர் பிரேம்குமார் துமாலையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X