For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலித் அமைப்பினர் கல்வீச்சில் 9 போலீஸார் காயம்

By Staff
Google Oneindia Tamil News

கே: பொதுத்துறை நிறுவனங்களை,தனியார் மயமாக்க எண்ணினால், அதன்ஊழியர்கள் ஏன் இவ்வளவு எதிர்ப்பு காட்டுகிறார்கள்?

ப: வேலை செய்ய வேண்டியிருக்குமே!

கே: நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மனிதர்களையும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளையும், பல ஆயிரக்கணக்கான சந்தன மரங்களையும்வெட்டி வீழ்த்தி, கடத்தி, சாதனை படைத்த அண்ணன் வீரப்பருக்கு, டாக்டர் பட்டம் கொடுத்தால் என்ன?

ப: இன்றைய டாக்டர்கள் சிலரைப் பார்க்கும் போது- 130 பேரைக் கொன்ற வீர்ப்பனுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை விட, அவனைடாக்டராகவே ஆக்கிவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

கே: பாத்திரம் அறிந்து பிச்சை இடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு - என்ற பழமொழி எல்லாம் இனி எடுபடுமா?

ப: எடுபடாது. பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள் - என்பதுதான் எடுபடும்.

கே: அ.இ.அ.தி.மு.க. முன்னாள் மந்திரிகள் ஒவ்வொருவராக தனி நீதிமன்றத்தில் தண்டனை பெற்று வருவது - எதைக் காட்டுகிறது?

ப: குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாருமே தண்டனைக்குள்ளாகவில்லை. சிலர் மீதான வழக்குகள் தள்ளுபடியாகி, அவர்கள்விடுவிக்கப்படுகிறார்கள். சில வழக்குகள் நியாயமாகவும், வேறு சில வழக்குகள், ஏனோ தானோ என்ற முறையிலும் பதிவாகியவைஎன்பத்ைதான் இது காட்டுகிறது.

கே: இன்டர்நெட் இணையம் என்று விஞ்ஞான வளர்ச்சியில் அதிகமாக நாம் வளர்ந்தாலும், இறை வழிபாடுகளில் முன்பை விட மூட நம்பிக்கையும் அதிகவளர்ச்சி அடைவது பற்றி...?

ப: இன்டர்நெட் போன்றவை வந்து விட்டதால், மனித சமுதாயம் முன்னேற விட்டது - என்ற எண்ணமே கூட ஒரு மூட நம்பிக்கை தானே!

கே: வீரப்பனைப் பிடிக்க ராணுவத்தை அனுப்ப மாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் கூறியது சரியா..?

ப: இது வீரப்பனுக்கு மத்திய அரசு கொடுக்கிற உத்திரவாதம் மாதிரி இருகிகறதே தவிர, மக்களுக்குக் கொடுக்கிற நம்பிக்கையாக இல்லை..

கே: ஒரு தேர்தலில் போட்டியிட்டு நமக்கு எவ்வளவுதான் மக்கள் செல்வாக்கு உள்ளதென்று பார்த்துவிட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதேஇல்லையா?

ப: ஒரு மலை மீது ஏறி, நம்மால் எவ்வளவுதான் ஏற முடிகிறது என்றோ - ஒரு சமுத்திரத்தில் இறங்கி, நம்மால் எவ்வளவு ஆழம்தான் இறங்கமுடிகிறது என்றோ - தேர்தலில் நின்று எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்றோ - பார்க்கும் எண்ணம் எனக்குக் கிடையாது.கே: உத்திரப்பிரதேசத்தில் பா.ஜ.க. மூன்றாவது இடத்திற்குச் சென்றுவிட்டதாக சர்வேக்கள் கூறுவது பற்றி...?

ப: சிரமப்பட்டால்தான் அதையாவது காப்பாற்றிக் கொள்ள முடியும், இல்லாவிட்டால் நாலாவது இடத்திற்குப் போக வேண்டியதுதான். (ஒரு வேளைகான்ஷிராமுடன் கூட்டணி அமைக்க திட்டம் போடுகிறார்களோ என்னவோ)கே:வீரப்பனின் கோரிக்கைகள் நல்ல கோரிக்கைகள்தான்;அதை அவன் அணுகும் முறைதான் தவறு என்று பா.ஜ.க.வைச் சேர்ந்த இல. கணேசன்கூறியிருக்கிறாரே?

ப: என்ன நல்ல கோரிக்கை.? தமிழகத்தில் தீவிரவாதிகள் விடுதலையா? கர்நாடகத்தில் தடா கைதிகள் விடுதலையா? கணேசன் இப்படிக் கூறினாராஎன்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.இப்படி அவர் பேசியிருந்தால், அது கண்டனததுக்குரியது,. இவரும் தன் தமிழ்ப் பற்றைக் காட்டிக் கொள்ள முனைந்து விட்டாரா? நல்ல கோரிக்கையாம், நல்லகோரிக்கை! பாம்பை நல்ல பாம்பு என்று சொல்கிற மாதிரி இருக்கிறது.

கே: சோவின் ராசிப்படி 2006-ல் அவர் தமிழக முதல்வராவார் என்கிறார் எங்கள் ஊர் ஜோசியர். என்ன சொல்கிறீர்கள்?

ப: ஜோக்கர் என்று எழுதுவதற்குப் பதிலாக ஜோசியர் என்று எழுதிவிட்டீர்களா?

கே: வீரப்பனின் பிடியில் நீங்கள் இருந்தால், அவன் சொல்லுக்காவது கட்டுப்படுவீர்களா?

ப: நானா? பேசியே அவனை குழப்பி விடுவேன். தயவுசெய்து யாராவது வந்து இவனை அழைத்துப் போய் விடுங்கள்; இந்த சனி என்னை விட்டாலேபோதும் என்று அவன் நொந்து கொள்வான்.

கே: தேசியக் கொடியில் பூக்கள் வைத்துக் கட்டுவது குற்றம் என்கிறாரே மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம் நாயக்?

ப: தேசியக் கொடி என்ன- மக்கள் காதா? என்று நினைத்திருப்பார். ஆனால் பிறகு மாற்றிக் கொண்டு விட்டாரே! தேசியக் கொடியும் மக்கள்காது போலத்தான். தாராளமாக பூ வைக்கலாம் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.

கே: பி.ஜே.பி. தமிழ்நாட்டில் எப்போது ஆட்சியைப் பிடிக்கும்.?

ப: 2016-ல். (அப்போது நான் உயிரோடு இருந்தால் தானே, உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்!)

கே: சட்டமன்ற மரபு என்றால் என்ன?

ப: ஒவ்வொரு முறையும் ரகளையும், அடிதடியும், அசிங்கமான பேச்சுக்களும் நடந்து முடிந்த பிறகு - எதைக் காப்பாற்ற வேண்டும் என்று சபாநாயகர்கூறுகிறாரே அது .

கே: நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதா ஆதரவாளராகி வருகிறீர்களோ என்று அச்சமாக இருக்கிறது?

ப: கவலை வேண்டாம். கடவுள் என்னைக் காப்பாற்றுவார்.

கே: மக்கள் தொடர்பு சாதனங்கள், கிரிமினல்களையும், கொள்ளைக்காரர்களையும் இன்றைய சமுதாயத்தில் புதிய ஹீரோக்களைப் போல்சித்தரிக்கின்றனவேஎன்ற ஜனாதிபதியின் வேதனை குறித்து?

ப: நியாயமாகப் பேசியிருக்கிறார். அவர் கூறியவை பத்திரிக்கை உலகின் சிந்தனைக்கு உரியது.

ஆட்டோ சங்கரிலிருந்து, விடுதலைப் புலிகள் உட்பட, வீரப்பன் வரையில், எம்மாதிரியான சக்திகளை நாம் ஊக்குவிக்கிறோம் என்பது பற்றிபத்திரிக்கைகள் சிந்திக்கத் தொடங்கவது நல்லது.

ஓர் ஆத்ம பரிசோதனை தேவைப்படுகிறது. ஜனாதிபதியின் மன வேதனை, இதற்கு தூண்டுகோலாக அமையலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X