For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலாம் நபியைக் குழப்பிய தமிழக காங். கோஷ்டிப் பூசல்

By Staff
Google Oneindia Tamil News

தமிழக காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியச் சொத்தான கோஷ்டிப் பூசல் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல் குழப்பங்கள் சில நாட்கள் காணாமல்போயிருந்தன. தொண்டர்கள் மத்தியிலும் தங்கள் கட்சியை புரிந்து கொண்டு கட்சியைவலுப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்று நினைக்கத் தொடங்கினர். ஆனால்,மறுபடியும் தலைவரை மாற்று என்கிற கோஷங்கள் கிளம்ப ஆரம்பித்து விட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் வந்தாலும் அவரை கீழே பிடித்துஇழுக்க, தலைவரை மாற்று என்று கோஷம் எழுப்ப உடனே காங்கிரஸ் கட்சியில் ஒருகோஷ்டி உருவாகும்.

ஒரு தலைவரை மாற்ற, எல்லாத் தலைவரும் ஒன்று சேருவார்கள். எல்லோரும் சேர்ந்துதலைவரை மாற்று என்று கோஷம் எழுப்பிய தலைவரை மாற்றி விட்டால், அவருக்கும்எதிராக ஒரு கோஷ்டி உருவாகும்.

இந்தத் தலைவர் எதிர்ப்புக் கோஷம் - கோஷ்டி என்று கடந்த 1 ஆண்டாக, கட்சியைபிடித்துள்ள சாபக்கேடு போல இருக்கிறது. வாழப்பாடி ராமமூர்த்தி, குமரி அனந்தன்,தங்கபாலு, அன்பரசு, திண்டிவனம் ராமமூர்த்தி இப்படி எவர் தலைவரானாலும் உடனேஅவரை மாற்ற கோரிக்கைகளும், கோஷங்களும், குற்றச்சாட்டுகளும் கிளம்பும்.

தற்பொழுதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தலைவரான உடனேயே, இவருக்கும் எதிராக ஒரு கோஷ்டி எழுந்தது. இருப்பினும்,பரபரப்பான அரசியலில் இந்த கோஷ்டி பூசல்கள் சற்று அமுங்கியே இருந்தது.

கடந்தவாரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபிஆசாத் சென்னை வந்திருந்தார். எதிர்காலத் தேர்தல், கூட்டணி இந்த விஷயங்கள் பற்றிபொதுவாக கவனிப்பதற்கு இரண்டு நாட்கள் வந்திருந்தார்.

வந்திருந்தவரிடம், தங்கபாலு அவரது கோஷ்டியினருடன் தனியாக சந்தித்தார்.எதிர்காலத்தில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி என்பது அமைந்தால்தான் தமிழககாங்கிரசின் மானம் காப்பாற்றப்படும் என்று சொல்ல அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் குலாம் நபி ஆசாத்.

தற்பொழுதைய சூழ்நிலையில். ஜெயலலிதா. காங்கிரஸ் கட்சியின் மீது கடும்கோபத்தில் இருக்கிறார். இற்கு காரணமே, இப்போதைய தலைவர் இளங்கோவன்தான்.

ஜெயலலிதாவின் கோபத்தை தணிக்க. இளங்கோவனை தலைவர் பதவியில் இருந்துநீக்க வேண்டும். ஜெயலலிதாவும் விருப்பத்தோடு காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார்என்று சொல்ல டென்ஷனாகிப் போனாராம் குலாம் நபி ஆசாத்.

திண்டிவனம் ராமமூர்த்தி தலைவராக இருந்த பொழுது தேர்தல் பிரச்சாரத்திற்குவருகிறேன் என்று விழுப்புரத்தில் சோனியாஜியை ஒரு மணி நேரம் மேடையில் காக்கவைத்தாரே அப்பொழுது யார் மீது ஜெயலிதாவுக்கு கோபம். திண்டிவனத்தார் மீதா?

சரி அப்பொழுது ஏதோ கோபம், நிறைய குழப்பம் திண்டிவனத்தாரை மாற்றியாகிவிட்டது. இப்பொழுதும் அதே பிரச்சனை. இதற்கு காரணம் இளங்கோவன்என்கிறீர்கள். நாளை நீங்களே தலைவராக வந்தாலும் ஜெயலலிதா கோபப்படத்தான்செய்வார். அதற்காக உங்களை மாற்ற முடியமா?

நம்மை விட பலமான கட்சி அ.தி.மு.க.. செல்வாக்கான தலைவர் ஜெயலலிதா ஒப்புக்கொளகிறேன். அதற்காக அவர் விருப்பப்படி கட்சியை மாற்றியமைக்க முடியாது.

இந்திரா, ராஜீவ் என்று பலர் தியாகம் செய்து வளர்த்த கட்சிஇது. தமிழக காங்கிரசைப்பொறுத்தவரை கட்சியில் இருக்கிற தலைவர்களிடம் உள்ள சின்னச் சின்ன ஈகோவைத்தவிர்த்தாலே போதும், எவ்வளவோ பலம் வாய்ந்த கட்சியாக நாம் மாறி விடலாம்.

மாவட்டம் வாரியாக எடுத்தால், பிரபலமான, செல்வாக்கான பல பிரமுகர்கள்இருக்கிறார்கள். அவர்கள் திரண்டு வேகத்தோடு செயல்பட ஆரம்பித்தால் எவ்வளவுநன்றாக இருக்கும் என்றவர் தயவு செய்து தேர்தலுக்காக உங்கள் தனிப்பட்ட ஈகோபிரச்சனைகளை தூக்கி எறிந்துவிட்டு செயல்படஆரம்பியுங்கள் என்று கை கூப்பிவேண்டினாராம் குலாம் நபி ஆசாத் தங்க பாலு கோஷ்டியினரிடம்.

சற்று சோர்ந்து போயே திரும்பினார் தங்கபாலு. மூப்பனாரையும் சந்தித்தார் குலாம் நபிஆசாத். ஜெயலலிதா பற்றித்தான் பேசினாராம். மூப்பனாரும் கூட்டணி, கூட்டணிஆட்சி பற்றி இப்பொழுது பேசுவது மக்களிடம் எடுபடாது.

அது தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்குத் தேவை, நாம்பலசாலிகள் என்பதைக் காட்டுவதுதான் என்று பேசி முடித்தாராம் மூப்பனார்.

இப்பொழுது இருக்கின்ற கோஷ்டிக் குழப்பங்களில், இவர்கள் என்று ஒன்று திரண்டுகட்சியை வலுப்படுத்தப் போகிறார்கள் என்ற சிந்தனையுடனேயே டெல்லி விமானம்ஏறினார் குலாம் நபி ஆசாத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X