For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸைக் காப்பாற்ற இளங்கோவன் வாயை ஒட்டவேண்டும்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இளங்கோவனின் வாயை பெவிக்கால் போட்டு ஒட்டினால் தான் தமிழகத்தில் மிச்சம் இருக்கிற காங்கிரசைக் காப்பாற்ற முடியும்என்று அ.தி.மு.க அவைத்தலைவர் காளிமுத்து ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கு கல்லறை கட்டுவதற்கென்றே தற்போதைய தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலையெடுத்திருக்கிறார்.

ஜெயலலிதா ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவி. அவரை சிறுபிள்ளைத்தனமானவர் என்று விமர்சித்த தரங்கெட்ட பேச்சுக்கு கட்சித்தொண்டர்களிடம் பொங்கி எழுந்த உள்ளக்குமுறலை நான் தெரிவித்தேன்.

இளங்கோவனின் பேச்சையும் பொருட்படுத்தாமல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அவருக்கு அழைப்புஅனுப்பியவர் எங்கள் கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

அதன்பிறகு இளங்கோவனின் பேட்டிகளும், பேச்சுக்களும் எல்லை மீறிப் போகின்ற காரணத்தால் தீவிரமான காங்கிரஸார்அவருக்கு எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கக் கூடாதே என்ற எண்ணத்தில் அவரை சந்தித்தேன்.

எந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சி சிதைந்து விடக்கூடாது என்பதில் அக்கறை கொண்டவர்கள் தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள்.தமிழ்நாடு காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் சட்டையை கிழித்து அடிதடி ரணகளத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பலமுறைஅரங்கேறியிருக்கிறது.

இவையெல்லாம் இளங்கோவனுக்கு மறந்திருக்குமோ? என்று கருதி நான் எச்சரித்தேன். அண்ணா பிறந்தநாள் விழாவில், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த போது அங்கே பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயலலிதா இளங்கோவனும், காளிமுத்துவும்ஒருவரையொருவர் விமர்சித்து வருகிறார்களே என்று கூறியபோது இது மிகவும் சின்ன விஷயம் என்று பெருந்தன்மையோடு பதிலளித்தார்.

ஆனால் சின்ன புத்தி படைத்த இளங்கோவன் அன்றைய தினமே காளிமுத்துவின் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் என்றுஉள்நோக்கத்தோடு பதில் சொல்லியிருப்பது குருவி தலையில் பனங்காயை வைத்தது போல் பதவி கனம் அவரை பிடித்து ஆட்டுகிறதுஎன்பது தெரிகிறது.

தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தரங்கெட்ட நாகரீகமில்லாத நாவடக்கமற்ற ஒருவர் மாநிலத் தலைவராக இருப்பதுவெட்கக்கேடு. இனிமேல் இளங்கோவன் வாயை பெவிக்கால் போட்டு ஒட்டினால்தான் தமிழகத்தில் மிச்சம் இருக்கின்றகாங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X