For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்குமார்: கன்னட சினிமா துறையினர் பேரணி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக பிலிம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் பெங்களூரில்வியாழக்கிழமை பேரணி நடக்கிறது.

பெங்களூர் நகரில் 144 தடையுத்தரவு இருந்தபோதிலும், விசேஷ அனுமதியின் பேரில் இந்த ஊர்வலம் நடக்கிறது.

இதுதொடர்பாக கர்நாடக பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க கர்நாடக, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி கர்நாடக பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் பெங்களூரில் வியாழக்கிழமை பேரணி நடத்துகிறது.

கெம்பேகவுடா ரோட்டிலுள்ள பன்னப்பா பூங்கா முன்பிருந்து ஆரம்பமாகும் இந்தப் பேரணி கவர்னர் மாளிகைக்கு செல்கிறது.

அங்கு கவர்னரிடம் மனு கொடுக்கிறது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட அனைத்து சினிமாதுறையினரும் கலந்து கொள்கின்றனர்.

கமிஷனர் எச்சரிக்கை:

நடிகர், நடிகையர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பேரணியில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நடக்காதவாறு போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளனர்.

அதையும் மீறி அசம்பாவிதச் சம்பவங்கள் நடந்தால், அச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றுபெங்களூர் நகர கமிஷனர் மடியாள் எச்சரித்துள்ளார்.

கறுப்புக்கொடி போராட்டம்:

இதற்கிடையே கன்னட சளுவளி சமிதி தலைவர்கள் வாட்டாள் நாகராஜ், நாராயணகுமார் மற்றும் பலர் மைசூர் பாங்க் சர்க்கிளில் இரு மாநிலஅரசுகளுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்துகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X