For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் கோரும் 5 கைதிகளின் காவல் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

வீரப்பன் விடுவிக்கக் கோரிய 5 கைதிகளின் காவலை பவானி நீதிமன்றம்வெள்ளிக்கிழமை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் வெள்ளித் திருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த துப்பாக்கிக்கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழ் விடுதலைப் படையைச் சேர்ந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் நான்கு பேர் திருச்சி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மணிகண்டன்,சத்தியர்த்தி, முத்துக்குமார் உட்பட 5 பேரும் வெள்ளிக்கிழமை பவானி நடுவர்நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களின் காவலை வரும் செப்டம்பர் 29 ம்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்ற வீரப்பன், கர்நாடகா அரசு 51 தடாகைதிகளையும், தமிழக அரசு இந்த 5 பேரையும் விடுவிக்க வேண்டுகோள்விடுத்திருந்தான்.

இந்நிலையில் இவர்களது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து 5 பேரும்நீதிமன்ற வளாகத்தில் கோஷம் எழுப்பினர். அரசு ஏமாற்றுவதாக இவர்கள் கூறினர்.

5பேரும் ஆஜர் செய்யப்படுவதைத் தொடர்ந்து பவானி நீதிமன்ற வளாகத்தில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X