For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒலிம்பிக்கில் இந்தியா

By Staff
Google Oneindia Tamil News

நினைத்தேன் எழுதுகிறேன்

இது சமாளிப்பு!

அமெரிக்காவில் இந்து அமைப்புகள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பாய், என்றுமே நான் ஒரு ஸ்வயம்சேவக்தான் என்று கூறியதுபலத்த சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

இந்துக்கள் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வதா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருகிறது. கிறிஸ்துவர்கள் போன்ற மைனாரிட்டி மக்கள்சார்பான அமைப்புகள் நடத்துகிற கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டால், அதற்கு ஆட்சேபம் இருக்காது.

இந்துக்கள் நடத்துகிற கூட்டம் என்றால் ஆட்சேபம் எழுகிறது,. இது நமது மதச் சார்பின்மையின் வினோதங்களில் ஒன்று.

இது ஒரு புறமிருக்க, ஸ்வயம்சேவக் பேச்சு எழுப்பிய சர்ச்சையைப் பார்த்தவுடன் வாஜ்பாய், நான் ஸ்வயம்சேவக் என்று சொன்னது தானாகவே முன் வந்துசேவை செய்கிறவன் என்ற அர்த்தத்தில் தான். தேசத்திற்கு சேவை செய்வதில் நான் முதல் ஆளாக நிற்பேன் என்ற அர்த்ததில்தான் பேசினேன் ... என்றுவிளக்கம் அளித்து விட்டார். உண்ாமையைச் சொல்வதென்றால், இது விளக்கமல்ல , சமாளிப்பு.

அரசியல்வாதிகளுக்கு ஒரு பலவீனம் உண்டு. எந்த இடத்தில் பேசுகிறார்களோ, அதற்கு தக்கவாறு எதையாவது சொல்லி, கை தட்டல் வாங்கி விடவேண்டும் என்ற துடிப்பு அவர்களுக்கு உண்டு.

வட இந்தியத் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால், தட்டுத்தடுமாறி வணக்கம்என்றாவது ஆரம்பித்து, தமிழர்களை திருப்தி செய்ய முற்பாடுவார்களே,அந்த மாதிரி. இதே ரீதியில்தான் வாஜ்பாய், தான் பேசிய இடத்தில் ஸ்வயம்சேவக் என்று தன்னை வர்ணித்துக் கொண்டார். அது சர்ச்சையைத் கிளப்பியதுஎன்றவுடன் சமாளிக்கப் பார்க்கிறார்.

ஒரு மனிதனுக்கு தன்னுடைய கருத்தில் அல்லது நிலைப்பாட்டில் ஒரு நிச்சயமான நம்பிக்கை இருந்தால், இந்த மாதிரி பிரச்சனைகள் எழாது. சில இடங்களில் ஒருநிலைப்பாடு , வேறு சிலர் மத்தியில் ஒரு மாறுதலான அணுகுமுறை ... என்றெல்லாம் இருந்தால் இப்படித்தான் சமாளிப்புகள் தேவைப்படும்.

வாஜ்பாய்க்கு ஆர்.எஸ்.எஸ்.சின் ஆதரவும் வேண்டும்; அதே சமயத்தில் தனக்கு தர்மசங்கடம் ஏற்படக்கூடிய சமயங்களில் ஆர்.எஸ்.எஸ். மரியாதையாகஒதுங்கி நிற்கவும் வேண்டும்.

இப்படி ஒரு அணுகுமுறையை அவர் வைத்திருப்பதால்தான் இந்தப் பேச்சும், அதற்கு ஒரு சமாளிப்பும் தேவைப்பட்டிருக்கின்றன. அவருக்குத் தேவை நெஞ்சத் துணிவு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X