For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாண்டிச்சேரி: பதவி விலகுகிறார் அமைச்சர் கண்ணன்

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

புதுவை அரசியலில் பரபரப்பு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தமாகாவை விட்டு விலகிய அம்மாநில தமாகா தலைவரும், அமைச்சருமான கண்ணன்,தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

அமைச்சர் பதவியை விட்டு கண்ணனை நீக்க வேண்டும் என்று தமாகா போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து இம்டிவுக்கு கண்ணன் வந்திருப்பதாகதெரிகிறது.

புதுவை த.மா.காவை உடைத்துக் கொண்டு கண்ணனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் வெளியேறியுள்ளனர். கண்ணனின் ஆதரவு தமாகாஎம்எல்ஏக்கள் சட்டசபையில் தனி அணியாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர். சுயேச்சையாக வெற்றி பெற்றவர் கண்ணன் என்பதால்,சட்டசபையில் அவர் தமாகா எம்எல்ஏவாக இடம்பெறவில்லை.

ஆனால், தமாகா தலைவர் என்ற முறையில் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டார். இப்போது அவர் மூப்பனாருக்கு எதிராக களம் இறங்கியுள்ளதால்,அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் தல்வர் சண்முகத்திற்கு தமாகவில் இருந்து பிரஷர்.

கண்ணனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், அவரும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் (மொத்தம் 4) ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவைவாபஸ் பெறக் கூடும். அப்படி பெற்றால் ஆட்சிக் கட்டில் ஊசலாடும்.

எனவே பெரிய குழப்பத்தில் முதல்வர் சண்முகம் திணறினார். அதை உணர்ந்து ஆட்சியை காப்பாற்றும் வகையில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ ஒருவரைதங்கள் பக்கம் இழுத்துள்ளனர். அதனால் மொத்தம் 30 பேர் பலம் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் - தமாகா கூட்டணி (காங்கிரஸ் 9, தமாகா 4,அதிமுக 2) ஆட்சிக்கு தேவையான 15 எம்எல்ஏக்கள் பலம் கிடைத்து விடும்.

ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவின் ஆதரவை உறுதி செய்து விட்ட நிலையில் கண்ணனை நீடிக்க விடக் கூடாது என்று தமாகாவினர் கொடி பிடிக்கத் துவங்கிவிட்டனர். இதற்கு மசிந்து பதவியை விட்டு நீக்குவதற்கு முன் ராஜினாமா செய்து விடுவது என்ற முடிவுக்கு கண்ணன் இப்போது வந்துள்ளார்.

இதற்கிடையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி, சென்னையில் அதிமுக தலைவி ஜெயலலிதா, தமாகா தலைவர் மூப்பனாரை சந்தித்துஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி புதுவை முதல்வர் சண்முகம் கூறுகையில், நாராயணசாமியின் ஆலோசனை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது அமைச்சரவையில் இருந்துகண்ணனை நீக்க வேண்டும் என்று மூப்பனாரிடம் இருந்து எந்த பிரஷரும் இல்லை. யாரை நீக்குவது சேர்ப்பது என்று எனக்குத் தெரியும்.

சென்னையில் நான் மூப்பனாரை சந்தித்து பேசி விட்டுத் தான் வந்துள்ளேன். எனவே எனது ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஸ்திரமாகவே உள்ளதுஎன்றார் நம்பிக்கையுடன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X