For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியாவை விமர்சித்தால் அடி விழும்: இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும், அ.தி.மு.கவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது.

ஜெயலலிதாவுடன் முட்டி மோதிக்கொள்வதும், திடீரென சமாதான அறிக்கை விட்டு அனைவரையும் குழப்புவதும் காங்கிரஸ் கட்சிக்குசகஜமாகிவிட்டது.

வட சென்னையில் நடந்த ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன், மிகவும் ஆவேசமாகவே உரை நிகழ்தித்தினார். இந்தகூட்டத்தில்,

திராவிட இயக்கங்களுக்கு முடிவு கட்ட நான் சபதம் ஏற்கிறேன். 1967-ம் வருடத்திற்கு முன் வேகமாக வளர்ந்த காங்கிரஸ் அதற்குபின்திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் மிகவும் பின் தங்கிவிட்டது.

திராவிட இயக்கத்தினர் எதற்கு பதவிக்கு வந்தார்கள்? தங்கள் கைகளையும், பைகளையும் நிரப்பத்தான். மக்களுக்கு நன்மை செய்வதற்காகஅல்ல. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்வது, எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகஅல்ல.

நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். 33 ஆண்டு காலம் போய்விட்டது, இன்னும் ஐந்து ஆண்டு காலம் என்ன?சாகும் வரை கூட பதவி சுகம் இல்லாமல் எங்களால் இருக்கமுடியும்.

எங்களுக்கு பதவி அவசியம் இல்லை. ஆனால் நாட்டு மக்களைக் காப்பாற்றவே பச்சைச் தமிழன் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்றுசொல்கிறோம்.

காங்கிரஸில் மந்திரியாக இருந்தவர்கள், பதவியில் இருந்தபோதும், இல்லாத போதும் எப்படி இருந்தார்கள் என்பதை பெருமையாகச்சொல்ல முடியும். ஆனால் திராவிட இயக்கங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் அமைச்சர் ஆவதற்கு முன் எப்படி இருந்தார்கள்?அமைச்சர்களானாதும் எப்படி பந்தா செய்தார்கள்? எப்படி கொள்ளையடித்தார்கள்? என்றெல்லாம் பேசுவதால் நம் மீது திராவிடஇயக்கத்தினருக்கு கோபம், குறிப்பாக இளங்கோவன் மீது கோபம்.

காங்கிரஸ் இப்பொழுது பலமாக இருக்கிறது. யாரும் கேவலமாக பேசடியாது. என்னைப்பற்றி தனியாக விமர்சிக்கலாம்.சோனியாவையோ, காங்கிரஸையோ எவனாவது விமர்சித்தால் எதிர்பாராத திசையில் இருந்து அவன் மீது அடிவிழும்.

நாங்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் அல்ல. அமைதியாக இருப்பதால், இவர்களுக்கு தைரியம் கிடையாது என்று நினைத்தால் நிச்சயம்மண்ணைக் கவ்வுவார்கள்.

கூட்டணி கட்சிகளுக்குள் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கலாம். பெரியார் விழாவில் இளங்கோவனைப் பேசவிடவில்லை என்றுஅரசியலாக்குகிறார்கள். உண்மையில் எனக்கு அந்த மேடையில் பேசுவதற்கு சிறிது கூட ஆசை கிடையாது. மற்றவர்கள் பேசட்டும் என்றுதான் இருந்தேன். இப்பொழுது சிலர் அரசியலாக்குகிறார்கள். இப்படிப்பட்ட பேச்சுக்கூட கூட்டணி கட்சியினர் இடம் தருகிறார்களேஅதுவும் கொடுமையானதுதான்.

நமது சக்தி என்ன என்பதை வருங்காலத்தில் பச்சைத் தமிழன் காமராஜர் ஆட்சியை உருவாக்குவதில் காட்டுவோம். அது எப்படிவேண்டுமானாலும், எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். அதுதான் நமது குறிக்கோளும் கூ.

இவ்வாறு இளங்கோவன் உணர்ச்சிபூர்வமாக அனைவரையும் குழப்பினார்.

இளங்கோவனது பேச்சுக்கு, போயஸ் தோட்டத்தில் பதிலடி தயாராகிக் கொண்டிருக்கிறது. அது காளிமுத்துவின் அடுக்கு மொழி தமிழ்அறிக்கை மூலமாக வெளியாகும் என்பது நமக்கெல்லாம் தெரிந்தது தானே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X