For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு செய்ய பிரான்சுக்கு மகாஜன் அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: ஜனநாயக நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்புக்கு தலைமை ஏற்க வந்த வாய்ப்பை, இந்தியா நிராகரித்துள்ளது சரியா?

ப: அது நிரந்தரமான தலைமை அல்ல ; அவ்வப்போது தலைமை மாறும் ; இருந்தாலும் தொடக்கத்திலேயே தலைமை ஏற்கிறவாய்ப்பு, நமது நாட்டின் முக்கியத்துவத்தைக் காட்டுகிற விஷயம்தான். இதை ஏற்க, என்ன காரணத்திற்காக இந்தியா மறுத்ததுஎன்பது எனக்குப் புரியவில்லை. ஆகையால் இது பற்றி இப்போது ஓர் அபிப்பிராயமும் சொல்வதற்கில்லை.

கே: சாதனைகளைக் கூறி இரண்டரை லட்சம் பேருக்கு முதல்வர் கருணாநிதி, கைப்பட கடிதம் எழுதப் போகிறாராமே?

ப:சொல்வதற்கு நிறைய இருந்தால்தானே பிரச்சனை? ஓரிரு வரியில் முடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.அதனால்தான் கடிதம் எழுதுகிறேன் என்கிறார்.

கே: காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து விட்டதே? இது எதைக் காட்டுகிறது?

ப: போலி அங்கத்தினர்களை பட்டியலில் சேர்க்கும் பணியை ஒழுங்காகச் செய்யும் ஆர்வம் அக்கட்சியில் குறைந்து விட்டது என்பதைத்தான்காட்டுகிறது.

கே: தலையில் முடி முளைக்க வீரப்பனிடமிருந்து ஏதாவது மூலிகையை கோபாலை வாங்கி வரச் சொல்ல வேண்டியதுதானே?

ப: கோபாலுக்கு என் மீது இருக்கிற கோபத்திற்கு என்ன மூலிகை வாங்கி வருவாரோ! முடிக்கு பதில் கொம்பு முளைத்துவிட்டால்...?

கே: பிரதமர் வாஜ்பேயின் அமெரிக்க விஜயம் தோல்வியடைந்து விட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறதே?

ப: வாஜ்பாய் தன் விஜயத்தின் போது, அமெரிக்காவை, இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்காததால் - பிரதமரின் விஜயம்தோல்வி என்று காங்கிரஸ் கூறுகிறதோ என்னவோ!

கே: அரசியல் ரீதியாக வாஜ்பாயை எதிர்க்கும் சோனியா, கருணாநிதியை எதிர்க்கும் ஜெயலலிதா, ஜோதிபாசுவை எதிர்க்கும்மம்தா - ஆகியோரின் ஒற்றுமை, வேற்றுமை என்ன?

ப: பெண்களுக்கு உரிய குணங்களாகிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு - இவற்றை ஆராயுங்கள். விடை கிடைத்துவிடும். கருணாநிதிதொடர்ந்து பதவியில் இருந்தால், தன்னை என்ன பாடுபடுத்துவாரோ - என்ற அச்சம் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.

வாஜ்பாயை எதிர்ப்பதில் தனக்கு இருக்கிற தகுதியின்மையை நினைத்து சோனியா தயங்குகிறார் - அது நாணம் எப்படியாவதுஜோதிபாசுவை இறக்கிதான் முதல்வராகி விட வேண்டும் என்று மம்தா பானர்ஜி நினைப்பதால், அவர் உள்ளம் மனம் கொள்ளாநிலை யில் இருக்கிறது - அது பயிர்ப்பு.

மென்மை என்கிற மடம் அரசியலில் எந்தப் பெண்மணியிடம் இருக்கிறது என்பது தெரியவில்லை.

கே: ஒரு மாநிலத்தில் சில மாவட்டங்களை கலவர பகுதியாக அறிவித்து, அவற்றை மத்திய அரசின் நேரடிப் பார்வைக்குக் கொண்டுவர முடியுமா?

ப: கலவர பகுதி சட்டம் என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதில் சில சிறிய திருத்தங்களைச் செய்தால் போதும் - மேற்கு வங்கத்தில்,சில மாவட்டங்களை கலவர பகுதிகளாக அறிவித்து, அங்கெல்லாம், விசேஷ நீதிமன்றங்களை உருவாக்கி, குறிப்பிட்ட வகையானகுற்றங்களை விரைவில் விசாரித்து விடவும் முடியும்.

ராணுவ சட்டமும் ஒன்று இருக்கிறது. அதுவும் பயன்படுத்தப்படலாம். பாராளுமன்றக் கூட்டம் இப்போது இல்லாததால், அவசரச்சட்டத்தின் மூலம், வேண்டிய மாற்றங்களைச் செய்துவிடலாம்.

இப்படி நடக்கப் போகிறது என்று நான் சொல்லவில்லை. நடத்த வேண்டும் என்று நினைத்து விட்டால், அதற்கு வழியுண்டு என்றுசொல்கிறேன் - அவ்வளவுதான்.

கே: ராமாயணம், மகாபாரதம் என்று ஆராய்ச்சி பண்ற ஆளுன்னு சோ-வைச் சொல்றாங்க இல்லே ... அவரை வரச் சொல்லுஎன்னோட வாதம் பண்ணட்டும் - என்று யாகவா முனிவர் தங்களை அழைக்கிறாரே ? தயாரா ? (28.9.2000 குமுதம் இதழ்)

ப: இதையடுத்து வெண்ணிற ஆடை மூர்த்தி, செந்தில், வடிவேலு - ஆகியோரும் என்னை விவாதத்திற்கு அழைக்கலாம்,எல்லாவற்றையும் நான் ஏற்க வேண்டியதுதானா?

கே: புதுவையில் கண்ணன் த.மா.கா.விலிருந்து விலகி உள்ளது பற்றி ...?

ப: எதிர்பார்த்தது கிட்டாத ஏமாற்றம் அவருக்கு இருந்து வந்திருக்கிறது. அவர் மிகவும் அதிருப்தி நிலையில் இருக்கிறார் - என்பதுபலரால் பேசப்பட்டது ; அந்த நிலையிலேயே த.மா.கா. அவரிடம் பேசி, அவருடைய கோபத்தைத் தணித்திருந்தால் - இந்த பிளவுதவிர்க்கப்பட்டிருக்கலாம்.

கே: கோபால் காட்டுக்குச் செல்ல மறுத்ததாகவும், அவரை வற்புறுத்தி வீரப்பனிடம் செல்ல சம்மதிக்கச் செய்ததாகவும்முதல்வர் கூறியுள்ளாரே! இஷ்டம் இல்லாத ஒருவரை வற்புறுத்தி அனுப்புவது சரியா?

ப: நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. அப்புறம் நாடகத்தின் ருசி குறைந்து விடும்.

கே: காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு என்று அமெரிக்க அதிபர் கிளின்டனின் அறிவிப்பு பற்றி ...?

ப: அப்படியொன்றும், அவர் இந்திய நிலையை முழுமையாக ஆதரித்து விடவில்லை. ஆனால் முன்புபோல், பெரிய தொல்லையாகஇருக்கவும் அமெரிக்கா முனையவில்லை. அதுவே நமக்கு ஓரளவு சாதகம் தானே! அந்த அளவில் திருப்திப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்.

கே: இந்தக் காலத்திலும் நரபலி கொடுப்பவர்கள் பற்றி ...?

ப: இதை ரகசியமாகச் செய்பவர் போலிச் சாமியார் ; பகிரங்கமாகச் செய்பவர் போராளி. முதலாவது - கொடூரம் ; இரண்டாவது -தியாகம்.

கே: வீரப்பன் இயங்குவது தமிழக எல்லைக்குட்பட்ட வனப்பகுதி. ராஜ்குமார் கடத்தப்பட்டதும் தமிழகப் பகுதியில்தான்.வீரப்பனுடன் இருக்கும் அமைப்புகளும் தமிழகத்தை சேர்ந்தவையே. எனவே ராஜ்குமாரை மீட்டுத் தர வேண்டியது தமிழக அரசின்பொறுப்புதான் என்கிறாரே ராமகிருஷ்ண ஹெக்டே சரியான வாதமா?

ப: இது வாதமே அல்ல ; இவ்விஷயம் பற்றிய உண்மை இது.

கே: ஐ.நா. சபை நிரந்தர உறுப்பினர் பதவி, இந்தியாவுக்குக் கிடைக்கும் என நினைக்கிறீர்களா?

ப: கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறேன்.

கே: அறிவு, ஞானம் - வித்தியாசம் என்ன?

ப; இருப்பதற்குள் எது பரவாயில்லை என்று பார்த்து ஓட்டளிப்பது - அறிவு, எதற்கு ஓட்டளித்தாலும், ஒரு பயனும் இருக்காது என்றுதீர்மானிப்பது - ஞானம்.

கே: பா.ஜ.க.வில் ப.சிதம்பரம் சேர முடிவெடுத்தால், அதை வரவேற்போம் -- என்று பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமண்கூறியுள்ளாரே ...? ப.சிதம்பரத்தின் நிலை என்ன?

ப: சிதம்பரம், பா.ஜ.க. வில் சேர்வதை அனுமதிக்கக் கூடாது - என்று தமிழக பா.ஜ.க, எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அக்கட்சியின்அகில இந்திய பொதுச் செயலாளர் பா.ஜ.க.வில் சேர சிதம்பரம் விருப்பம் தெரிவிக்கவே இல்லை என்று விளக்கி இருக்கிறாரே!வந்தால சேர்ப்போம் என்று ஒருவர் சொல்ல - வந்தாலும் சேர்க்கக்கூடாது என்று மற்றொருவர் சொல்ல - வருவதாகச்சொல்லவே இல்லை என்று மேலும் ஒருவர் விளக்க - எல்லாம் பா.ஜ.க. தரப்பு குழப்பங்களாகவே இருக்கிறது. அதனால் என்னநடக்கிறது என்பது இன்னமும் தெரியவில்லை.

கே: வீரப்பனின் தமிழர் பற்றுக்கும், பிரபாகரனின் தமிழர் பற்றுக்கும் என்ன வித்தியாசம்?

ப: பிரபாகரனின் பற்று , வீரப்பனின் பற்றை விட பல மடங்கு பெரிது. வீரப்பன் 100 தமிழர்களைத்தான் கொன்றிருக்கிறான்.பிரபாகரனால் கொல்லப்பட்ட தமிழர்கள் ஆயிரக்கணக்கானவர்கள்.

கே: 2001-ல் ஆட்சி தொடர வேண்டுமா, மாற வேண்டுமா?

ப: இப்படியேதான் தொடரும் என்றால் மாற வேண்டியதுதான் ; கொஞ்சம் மாறும் என்றால் தொடரலாம்.

கே: சிட்னி ஒலிம்பிக் போட்டியில் ஆந்திராவைச் சேர்ந்த மல்லேஸ்வரி, பளு தூக்கும் போட்டியில் வென்று வெண்கலப் பதக்கம்பெற்றுள்ளது பற்றி ...?

ப: பளு தூக்குவதில், இந்தியாவில் நிபுணர்கள் பெண்கள்தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இனிமேல் வீடுகளில் பெண்கள் கணவனையோ, மகனையோ பார்த்து அந்த பக்கெட்டைத் தூக்க முடியவில்லை - அந்தப் பெட்டியைநகர்த்த முடியவில்லை - அந்த மேஜையை அசைக்க முடியவில்லை என்று சொல்லி அவர்களிடம் வேலை வாங்குவது நியாயமாகஇருக்காது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X