For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாராயணனின் வாகன உலா

By Staff
Google Oneindia Tamil News

Balaji&Padmavathyபிரம்மோற்சவம் நடக்கும் 10 நாட்களில் 10 வாகனங்களில் உலா வருவார். வீதிஉலாமுடிந்த பின் இரவு ஊஞ்சல் சேவை என அழைக்கப்படும் திருவேஙகடத்தானைஊஞ்சலில் வைத்து ஆட்டி பாட்டுப்பாடி துயில் செல்ல அனுபபுவர் அதுகண்கொள்ளாக் காட்சி.பிரம்மோற்சவத்தின் முதல் நாள் அன்று அங்குரார்பணம் நடந்தது.

இரண்டாவது நாள் துவாஜாரோகணும் நடைபெற்றது.

மூன்றாவது நாள் சேஷ (நாக) வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வார். நாகவாகனத்தில் பெருமாள் கம்பீரமாக வீற்றிருப்பார். பாற்கடலில் ஆதிசேஷன் மேல்பள்ளி கொண்ட பெருமாளல்லவா அவன்.

அவன் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டதை நாம் காண இயலாது. இங்கு அவன் சேஷவாகனத்தில் பவனி வருவதைக் கண்டு புண்ணியம் பெறலாம். அவனுக்குசேஷவாகனத்தில் இருக்கும் போது மங்கள ஆரத்தி காட்டும் போது அநத் தீப ஒளியில்அவன் முகம் ஜொலிப்பது அப்பப்பா காணக் கண் கோடி போதாது.

Tirupathi-Gopuramநான்காம் நாள் சிம்ம வாகனத்தில் சிரித்தபடி காட்சி தருகிறான் திருவேங்கடத்தான்.உலகையே காத்து அருள்பவன் சிங்கத்தின் மேல் சிரித்தபடி வருவது என்னைதஞ்சமடைந்தோருக்கு என்றும் மகிழ்சியே என கூறுவது போல் இருக்கும்.

ஐந்தாம் நாள் கற்பக விருட்சம்வாகனத்தில் எழுந்தாள்கிறார் பகவான். கேட்டதைஎல்லாம் இல்லை என கூறாது அருள்வது கற்பக விருட்சம். கேட்பது எல்லாத்தையும்இல்லை என அருள்பவர் திருப்பதி வெங்கடாஜலபதிப் பெருமாள். அவர் கற்பகவிருட்சத்தில் வருவது பொறுத்தமானது தானே! இதே தினம் சர்வ பூபால வாகனத்திலும்எழுந்தருள்வார் இறைவன்.

ஆறாவது நாள் மோகினி அவதாரம் கொண்டு வருகிறார் பெருமாள். பெருமாள்பெண் வேடமிட்டு மோகினி அவதாரத்தில் காட்சியளிப்பது காண்பதற்கரியகாட்சியாகும். இறைவனின் வாகனம் கருடன். ஆறாவது நாள் மோகினி அவதாரதிருக்காட்சிக்குப் பிறகு கருட வாகனத்தில் பவனி வருகிறார் பெருமாள்.

ஏழாம் நாள் ஆஞ்சநேய வாகனத்தில் வீதி உலா. திருமால் ராமாவதாரம் எடுத்தபோது அவருக்கு பேருதவியாக இருந்தவர் ஆஞ்சநேயர். அவர் ராம பக்தர். அவர்மேல் அமர்ந்து திருவேங்கடத்தான் பவனி வருவது இங்கு மட்டுமே காண கிடைக்கும்காட்சியாகும்.

Balajiஇதே தினம் மாலையில் யானை வாகனத்திலும் பவனி வருவார் பெகுமாள்.

எட்டாம் நாள் சூரியப் பிரயை வாகனத்திலும், சந்திரப் பிரயை வாகனத்திலும்எழுந்தருள்கிறார் திருவேங்கடப் பெருமாள்.

ஒன்பதாம் நாள் திருத்தேர் வைபவம். குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்டதேரில் பெருமாள் எழுந்தருள, பக்தர்கள் கோவிந்த கோஷத்துடன் வடம் பிடித்துதேரிழுக்க, அழகுற தேரில் அருட்கடல் அசைந்து வரும் காட்சி அருமையானதாகும்.

நிறைவு நாளான பத்தாம் நாளன்று பல்லக்கு உற்சவம் மிக கோலகலமாககொண்டாடப்படும். மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வெங்கடாஜலபதிஅமர்திருக்க அதை ஸ்ரீமான் தாங்கிகள் தூக்கி வர பிரகாரத்தில் வலம் வருவது கண்நிறையக் கணவேண்டியக் காட்சியாகும்.

காலை முதல் இரவு வரை பக்த கோஷ்டிகள் கோவிந்த நாமத்துடன் கோவிந்தனைதஞ்சமடைந்திருக்க, தஞ்சமடைந்தோருக்கு வேண்டிய வரமளிந்து அருள் புரிகிறான்வேங்கடத்தான்.

வாழ்வில் அனைவரும்பிறவிப் பயனை அடைய ஒரு முறையாவதுபிரம்மோற்சவத்தைக் காண வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X