தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு புதிய பெயர் வருகிறது

Subscribe to Oneindia Tamil

ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்குப் புதிய பெயர் சூட்டப்படும் என்று அந் நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இப்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி "புரொட்டியேஸ்" என்று அழைக்கப்படுகிறது.

1991-ம் ஆண்டு கிளைவ் ரைஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிமுதல்முதலாக இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்தபோது அணிக்கு அப் பெயர்வைக்கப்பட்டது. புரொட்டியே என்பது அந் நாட்டின் தேசியப் பூவின் பெயராகும்.

ஆனால், கிரிக்கெட் அணிக்குப் புதிய பெயர் வைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இனி தென் ஆப்பிரிக்க அணியை புரொட்டியேஸ் என்றுஅழைக்கவேண்டாம் என்றும் செய்தி நிறுவனங்களை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்வாரியத்தின் நிர்வாக இயக்குநர் அலி பாச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அணியின் பெயர்தான் புதிதாக மாற்றப்படுமே தவிர, அணியின் பேட்ஜ் மற்றம்புரொட்டியே சின்னம் பொறித்த கொடியும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றுதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் விற்பனை கமிட்டி தெரிவித்துள்ளது.

அணிக்குப் புதிய பெயர் தேர்வு செய்யப்பட்டவுடன் அதுபற்றி உடனேஅறிவிக்கப்படும். அதுவரை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கதேசிய கிரிக்கெட் அணி அல்லது தென் ஆப்பிரிக்கா என்றே அழைக்கப்படும் என்றார்அலி பாச்சர்.

ஐ.ஏ.என்.எஸ்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...