For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு எரிவாயு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முடிவு

By Staff
Google Oneindia Tamil News

கேள்வி - பதில்

கே: நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் என்கிறாரே முதல்வர்கருணாநிதி?

ப: பயனற்றது - என்று ஒதுக்கப்பட்டுவிட்ட சித்தாந்தத்தை, தங்களுடைய கொள்கையாகக் கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்கள். முதல்வரோ,நாங்கள்தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் என்று கூறுகிறார். பெருமை பேசுகிற மாதிரி இல்லை - ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிற மாதிரிஇருக்கிறது.

கே: காங்கிரசின் கலாசாரம் நன்றி மறக்கிற கலாசாரம் என்கிறார் கருணாநிதி. தி.மு.க.வின் கலாசாரம் என்ன?

ப: மற்றவர்கள் மட்டும் நன்றி மறக்காமல் இருக்க வேண்டும் - என்று எதிர்பார்க்கிற கலாசாரம்.

கே: காதில் பூ சுற்றும் வேலை என்பதற்கு சமீபத்திய உதாரணம்?

ப: ஜெயலலிாதவுக்கு பாராட்டு விழா நடத்தி விட்டு, இது பெரியார் விழா என்றார்களே, அது ஒரு நல்ல உதாரணம்.

கே: அழகிரி என் வளர்ப்பு மகனும் இல்லை; அவரது திருமணத்துக்கு நான் 100 கோடி ரூபாய் செலவு செய்யவும் இல்லை - என்று கருணாநிதி கூறியதுஎதைக் காட்டுகிறது?

ப: ஜெயலலிதாவுக்கு மக்கள் சென்ற தேர்தலில் தந்த தோல்வியிலிருந்து, இன்றைய முதல்வர் எதையும் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான்காட்டுகிறது.

கே: இந்தக் கூட்டணி கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணி என்கிறாரே ஜெயலலிதா ... ?

ப: தேவலை. ஜெயிலுக்கு அனுப்புவேன் என்று கூறி வந்தவர், இப்போது வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறுகிறார். நிதானம் வந்திருக்கிறது.பாராட்ட வேண்டும்.

கே: மாமன், மச்சான் சண்டைக்குக் கூட இன்று பஸ்ஸை கொளுத்துகின்றனர் என்கிறாரே அமைச்சர் அன்பழகன்?

ப: பின் என்ன? அண்ணன், தம்பி சண்டைக்கு பஸ்ஸை கொளுத்துகிறார்கள் என்றா சொல்வார்? எந்த அளவுக்குப் பேசலாம் என்பது அவருக்குதெரியாதா? அனுபவஸ்தர் அல்லவா!

கே; பெரியாரின் கொள்கைகளே மதவாதத்தை எதிர்க்க வல்ல மருந்து என்கிறார் மூப்பனார். அப்படி மதவாதத்தை எதிர்க்க பெரியார் சொன்னகொள்கைகள்தான் என்ன?

ப: இந்து மதம் ஒழிய வேண்டும் - என்பதுதான் பெரியார் சொன்ன வழி. அது ஒழிந்து விட்டால், அப்புறம் 85 சதவிகித மக்களுக்கு மதமேஇருக்காதே! அப்புறம் ஏது மதவாதம்? மதவாதத்தை ஒழிக்க இதை விட சிறந்த வழி இருக்க முடியாது - என்று ஒப்புக் கொள்வதுதானே பகுத்தறிவு?மூப்பனார் பகுத்தறிவுவாதியாகும் தகுதி பெற்று விட்டார்!

கே: ராஜ்குமார் மீட்கப்படும் பட்சத்தில், அதனுடைய பெருமை யாரைச் சென்றடையும்?

ப: வீரப்பன் கேட்டதையெல்லாம் கொடுத்தாகி விட்டது; கோர்ட் தலையீட்டினால் கைதிகள் விடுதலை தடைப்பட்டதே தவிர, இரு மாநில அரசுகள்அதற்கும் தயாராகத்தான் இருந்தன; வீர்ப்பன் விரும்பியபடியே அவனுடைய தமிழ் வீரத்தின் பெருமையைக் குறைத்துவிடாமல் இருப்பதற்காக, அவனுக்குபணம் கொடுத்த விவகாரம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது; இரண்டு மாதங்கள்

ஆகிவிட்டன; இனிமேல் ராஜ்குமார் மீட்கப்படுகிறபோது, அதில் பெருமை வேறு ஒரு கேடா?

கே: டீசல், கியாஸ் விலை உயர்கிறதாமே? வழக்கம் போல இந்த உயர்வை ஆதரிப்பீர்கள்தானே?

ப: யெஸ். வேறு வழியில்லை.

கே: தர்மபுரியில் அ.தி.மு.க.வினர் மூன்று மாணவிகளை எரித்ததை பல தடவைகள் காண்பித்த சன் தொலைக்காட்சி நிறுவனம், மதுரையில் அழகிரியின்ஆதரவாளர்கள் எரித்த 8 பஸ்களையும், செய்த அட்டகாசத்தையும் கண்டு கொள்ளவே இல்லையே? ஏன்?

ப: அரசாங்க கெஜட்டில் கூடத்தான் மதுரை சம்பவங்கள் வெளியாகவில்லை. அது போலத்தானே இதுவும்!

கே: மு.க. அழகிரி மீது தலைமைக் கழகம் எடுத்த முடிவு - நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு - என்ற நிலை தானே?

ப: அப்படி இருக்காது. அடி பொய்யானாலும், அழுகை நிஜம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கே: மு.க. அழகிரியை தி.மு..க. உண்மையிலேயே ஓரம் கட்டி விட்டது என்று நினைக்கிறீர்களா?

ப: இது தற்காலிக நடவடிக்கை என்று நினைக்கிறேன். விரைவில் சரி செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கிறேன்.

கே: தற்போள்ள நிலவரப்படி ஜெயலலிதா, கலைஞர் இருவரில் (அடுத்த முதல்வராக வர) யார் பெட்டர்? பட் டென்று பதில் சொல்லுங்கள்.

ப: நமக்கு சர்க்கரை வேண்டும். ஆனால் தமிழகமோ, இன்றைய நிலையில் ஆலையில்லா ஊர். கருணாநிதி இலுப்பைப் பூ.

கே: சோவின் பேச்சையும், எழுத்தையும் எல்லோரும் விரும்பிப் படிக்கிறார்கள். ஆனால் யாரும் அதன்படி நடப்பதில்லை என்று சொல்லப்படுவது பற்றி...?

ப: திருக்குறளை எல்லோரும் படிப்பார்கள்; ஆனால் அதன்படி நடந்து கொள்ள மாட்டார்கள்; அந்த மாதிரிதான் சோவின் கருத்துக்கள் என்றுகூறுகிறீர்களா? எனக்கு இந்த மாதிரி புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது.

கே: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து, தங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?

ப: ரொம்ப அதிகம். குறைக்கப்பட வேண்டும்.

கே: தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாங்கள் நன்கு ஆட்சி செய்வோம் என்றெல்லாம் சொல்லாமல், மறைந்த முன்னாள் தலைவர்களின் ஆட்சிஅமைப்போம் என்று சொல்வதன் காரணம் என்ன?

ப: பீடி விளம்பரங்களில், இன்றைய முதலாளியின் படத்தைப் போட மாட்டார்கள். ஐம்பது வருஷத்திற்கு முன்னாள் பீடி வியாபாரத்தைத் தொடங்கிய முப்பாட்டன்படத்த்ைதான் போடுவார்கள். இன்று அரசியல் கட்சிகள் நடத்துவது பீடி வியாபாரம்.

கே: நாளைய உலகம் இளைஞர்களின் கையில் என்கிறார்கள். உங்கள் பார்வையில் இன்றைய இளைஞன் எப்படி உள்ளான்?

ப: நாளைய உலகத்தை நினைத்தால் ஐயோ பாவமாக இருக்கிறது என்று கூறுமளவுக்கு உள்ளான்.

கே: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திடீரென மாற்றப்பட்டதன் பின்னணி என்ன?

ப: தெரியவில்லை. அடையாள அட்டை விஷயத்தில், மாநில அரசினால் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு கண்டிப்பு காட்டத் தொடங்கிவிட்டாரோ,என்னவோ!

கே: ஐயோ, தலை வெடித்து விடும் போலிருக்கிறது. சீக்கிரம் சொல்லுங்களேன். பெரியார் விழா நடத்த ஜெயலலிதாவிற்கு தகுதி இருக்கிறதாஇல்லையா?

ப: உங்கள் தலையைக் காப்பாற்றுகிறேன். மக்களை முட்டாளாக்க நினைக்கும் எவருக்கும், பெரியார் விழா நடத்துகிற தகுதி உண்டு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X