For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயதசமி

By Staff
Google Oneindia Tamil News

இன்று (சனிக்கிழமை) நவராத்திரியின் நிறைவுநாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.

கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இன்று இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் படுக்க வைக்கப்படும்.

நவராத்திரியையொட்டி கடந்த 9 நாட்களாக பொம்மைகளையே தேவி உருவமாக பாவித்து வணங்கி பூஜை செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு நாளும்ஒவவொரு அம்மனுக்கான நாள் எனக் கொண்டாடப்பட்டாலும் அனைத்தும் தேவியின் வடிவங்களே.

தேவி அரக்கனை கொல்ல ஊசி மேல் நின்று தவம் செய்தாள். விஜயதசமியன்று அந்தி வேளையில் தேவி அரக்கனை சம்ஹாரம் செய்தாள். அவள் தவமும்முடிவுக்கு வந்தது.

தேவியாக பாவிக்கப்பட்ட பொம்மைகளும் இதுநாள் வரையில் கொலுப்படியில் நிற்க வைக்கப்பட்டிருந்தன. இன்றைய தினத்தில்தான் அரக்கனை அந்திவேளையில் தேவி சம்ஹாரம் செய்தாள். இதோடு நவராத்திரியும் முடிகிறது.

தேவியாக பாவிக்கப்பட்ட பொம்மைகளும் இதுநாள் வரையில் கொலுப்படியில் நிற்க வைக்கப்பட்டிருந்தன. பொம்மைகள் படுக்க வைக்கப்படுவது,நின்ற நிலையில் தவம் செய்த தேவி தவம் முடிந்து அசுரனை சம்ஹாரம் செய்தபின் தேவி ஓய்வெடுப்பெடுப்பதகாவும் கருதப்படுவதால் தேவியாகபாவிக்கப்பட்ட பொம்மைகள் படுக்க வைக்கப்படுகின்றன என கூறப்படுகிறது.

தீமைகள் அழிக்கப்பட்டு நன்மைகள் துவங்கும் நாளாக கருதப்படும் இந்த நாளில் குழந்தைகளை கல்வி கற்க அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது.

முற்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கல்வி பயில குருகுலத்திற்கு அனுப்பி வைத்தனர். குருவின் வீட்டிற்குச் செல்லும் குழந்தைகள் கல்விக்காலம் முடியும் வரை வரது இல்லத்திலேயே தங்கி கல்வி பயின்று வருவார்கள். குருவின் வீட்டுக்குச் செல்ல விஜய தசமி உகந்த நல்ல நாளாககருதப்பட்டுவந்தது.

அதனால் அன்றைய தினம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குருவின் இல்லத்திற்கு தட்டில் வெற்றிலை-பாக்கு, பழம், தேங்காய், குருதட்சணையுடன் அழைத்துச் சென்று அவரிடம் தங்கள் குழந்தைகளை கல்வி கற்க ஒப்படைப்பார்கள்.

விஜயதசமி அன்று அட்சரா பியாசம் எனப்படும் முதல் பாடத்தை குரு தொடங்குவார். தரையில் அமர்ந்துதான் அக் காலத்தில் மாணவர்கள் அமர்ந்துகல்வி பயில்வார்கள். அவர்களுக்கு முதல் வார்த்தையான அவை குரு, மாணவனின் கையைப் பிடித்து தரையில் மண்ணின் மீது எழுத வைத்து பாடத்தைத்துவக்குவார்.

இந்த நடைமுறை இப்போதும் கூட தமிழகத்தில் ஆங்காங்கே கடைபிடிக்கப்படுகிறது. குருவின் வீட்டுக்குப் பதில் நர்சரி பள்ளிகளுக்கு குட்டீஸ்களை அனுப்பவிஜயதசமியை பெற்றோர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வருவது வருத்தத்திற்குறியது.

புதிய அலுவலகக் கணக்குகளையும் விஜயதசமியன்று துவங்குவதுண்டு. சிலர் புதிய தொழிலையும் இந்த தினத்தன்று துவக்குவதுண்டு.


அக்டோபர் 05, 2000

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X