பிரான்ஸில் துர்கா பூஜை கோலாகலம்
பாரிஸ்:
நவராத்திரியை முன்னிட்டு இந்தியாவில் 10 நாட்கள் துர்கா பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் வெளிநாட்டில் இந்த பூஜை மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இது நடந்தது பிரான்ஸில்.
தலைநகர் பாரிசின் தெற்கு பகுதியில் உள்ள மெய்சன் டெல் இந்தி என்ற பகுதியில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. மெய்சன் டெல் இந்தி பகுதியில்வாழ்பவர்கள் அனைவரும் இந்தியாவிலுள்ள வங்க மொழி பேசும் மக்கள். அங்கு வாழும் இந்திய மக்கள், அதாவது வங்காளிகள் இந்த துர்காபூஜைக்கு ஏற்பாடு செய்து, 10 நாட்களும் மிகச் சிறப்பாக பூஜை செய்கின்றனர்.
பாரிசில் மிகக் குறைவான இந்திய மக்களே வாழ்கின்றனர். இருப்பினும் அவர்கள் கடந்த 14 வருடங்களாக இந்த துர்கா பூஜையைக் கொண்டாடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துர்கா பூஜைக்காக அவர்கள் 10 நாட்களும் துர்கை அம்மன் உள்பட பல கடவுள்களின் உருவ சிலைகளுடன் கொலு வைத்து, மாலையில் சிறப்புவழிபாடு நடத்துகிறார்கள். துர்கா பூஜையின்போது ஒவ்வொரு நாளும் மாலையில் பிரபல வங்காள கலைஞர்களின் இசை, நாட்டியம், நாடகம் ஆகியவைஇடம்பெறுகிறது.
இந்த வருடமும் வழக்கம் போல் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. நோபல் பரிசு பெற்ற ரவீந்திர நாத் தாகூரின் கவிதைகளுடனும், ஜெயஸ்ரீமஜூம்தாரின் பக்திப்பாடல்களுடன் 10 நாட்களும் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து உதய் தேஷ்பாண்டேயின் தபேலாவாசிக்கப்பட்டது.
இந்த வருடம் பாரிசில் வாழும் தொழிலதிபர்கள், ஏர்இந்தியா, வங்கதேச பிமான் அமைப்பு மற்றும் மத்திய அரசின் சுற்றுலாப் பிரிவினரும் இந்தவிழாவிற்கு நிதியுதவி செய்திருந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications