அக்.12-ம் தேதி கறுப்பு நாளாக அனுசரிக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் முடிவு
இஸ்லாமாபாத்:
அக்டோபர் 12-ம் தேதி கறுப்பு நாளாக அனுசரிக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிமுடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இதே அக்டோபர் 12-ம் தேதிதான் நவாஸ் ஷெரீப் தலைமையிலானபாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஆட்சியை தற்போது பாகிஸ்தானில் ஆட்சி நடத்திவரும் ராணுவத் தளபதி பர்வேஷ் முஷாரப் ராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்துஆட்சியைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அக்டோபர் 12-ம் தேதியை கறுப்பு நாளாக அனுசரிக்க பாகிஸ்தான்முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது. இத் தகவலை நவாஸ் ஷெரீப்பின் மனைவிகுல்சும் நவாஸும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய ஒருங்கிணைப்புகமிட்டித் தலைவர் ஸஃபருல் ஹக்கும் தெரிவித்தனர்.
கறுப்பு நாளன்று நாடு முழுவதும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களும்,ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரப்பில் சர்வாதிகார ஆட்சிதான் நடைபெற்ற வருகிறது.ஜனநாயகம் நசுக்கப்படுகிறது. மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அரசியல் ரீதியிலும், பொருளாதாரரீதியிலும் பாகிஸ்தான் நிலைகுலைந்துவிட்டது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு பயங்கரஅச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!