For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வழக்குகள்....வழக்குகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் தமிழக முதல் வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் டான்சிநிலவழக்கில் ஊழல் செய்ததாகக் கூறி மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 1992-ம் ஆண்டு அரசுக்கு சொந்தமான டான்சிநிலத்தை அவரும், அவரது தோழி சசிகலாவும் நடராஜன் பேரில் நடத்தப்பட்டு வந்தஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்காக குறைந்த விலைக்குவாங்கி அரசுக்கு 4 கோடிரூபாய் அளவு இழப்பு ஏற்படுத்தியாக அவர் மீதுதற்போதைய ஆளும் தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

முன்னதாக பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ஜெயலலிாதவுக்கு கொடைக்கானல் பிளசண்ட்ஸ்டே ஓட்டலுக்கு முறை கேடாக அனுமதி வழங்கியதற்காக ஒராண்டு சிறை தண்டனைவழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்பழகன் முன்பு டான்சி வழக்கில் 1996-ம் ஆண்டு நவம்பர்மாதம் 15-ம் தேதியும், 1997-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதியும் இரண்டுகுற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட்டது.

இதில் ஜெயலலிதா தவிர நடராஜன், டான்சி நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குனர் ஸ்ரீநிவாசன் , அப்போதைய பத்திரப்பவு நிறுவனத்தின் தலைவர்நாகராஜன், முதல்வரின் முன்னாள் இணைச் செயலாளர் கற்பூரசுந்தரபாண்டியன்முன்னாள் கிராமப்புறை தொழிற்துறை அமைச்சர் முகமது ஆசிப் ஆகியோர் மீதும்வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கராஜ்ஜனவரி 13-ம் தேதி ஜெயலலிதாவை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.உச்ச நீதிமன்றம் ஏப்ரல்மாதம் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கலாம் என தீரப்ப்பளித்தது.

ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தால், சுப்ரமணியம் ஸ்வாமி தாக்கல் செய்தநிலக்கரி ஊழல் வழக்கிலிருந்து அ.தி.மு.க. தலைவர் நெடுஞ்செழியனையும்,ஜெயலலிதாவையும் நீதிபதி ராதாகிருஷ்ணன் விடுதலை செய்தார்.

கடந்த 10 நாட்களில் தண்டிக்கப்பட்டுள்ள முக்கிய அரசியல் புள்ளிகளில்ஜெயலலிதாவும் ஒருவராவார். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் தனது அரசைகாப்பாற்றிக் கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கடந்தசெவ்வாய்க்கிழமையன்று நீதிமன்றம் தெரிவித்ததது

எனவே இந்த வழக்கில் அவருக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனைவழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

இதனிடையே ஜெயலலிதா மீதும், சசிகலாவின் உறவினரும், அ.தி.மு.க. இளைஞர்அணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினகரன் மீதும் இங்கிலாந்தில்ஓட்டல் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கலர் டி.வி ஊழல் வழகிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மீது இன்னும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குநிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 300 சாட்சிகள்விசாரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஜெயலலிதா அயல்நாட்டிலிருந்து 300,000 டாலரை சானல் தீவுகளில் உள்ளவங்கியில் செலுத்தியிருப்பதைக் கண்டுபிடித்தி சி.பி.ஐ. மீது வழக்கு பதிவுசெய்துள்ளது. ஆனால் ஜெயலலிதா அது தனக்கு பரிசாக அளிக்கப்பட்ட பணம் எனக்கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X