For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யூகோ. போல இலங்கையிலும் புரட்சி வரும் .. எச்சரிக்கிறது எதிர்க்கட்சி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடக்கும் பொதுத்தேர்தல் நேர்மையாக நடக்காவிடில் யூகோஸ்லேவியா நாட்டில்நடந்தது போல் புரட்சி வெடிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கே எச்சரித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம்ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்தது.

இந்த நிலையில், தலைநகர் கொழும்பில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரனில்விக்ரமசிங்கே நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் பொதுத்தேர்தல் மிக அமைதியான முறையில் நடக்கவேண்டும். இல்லாவிட்டால் சமீபத்தில் யூகோஸ்லேவியால் நடந்தது போல் இலங்கையிலும் புரட்சி வெடிக்கும்.

யூகோஸ்லேவியாவில் எதிர்க்கட்சித் தலைவர் கோஸ்டுனிகா தன்னை அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.இதுவரை அதிபராக இருந்த மிலசோவிச், செர்பியாவில் பாதாள சிறையில் பதுங்கியுள்ளார்.

அங்கு நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெற்று விட்டதாகப் பொய் கூறி அதிபர் மிலாசோவிச்தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் கோஸ்டுனிகாவின் போராட்டத்தால்பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

இதே நிலைமைதான் இலங்கையிலும் நடக்கும். அதாவது நேர்மையற்ற முறையில் தேர்தல் நடந்தால் அதிபர்சந்திரிகாவுக்கும், மிலசோவிச்சுக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்.

இந்த முறை கண்டிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி பெறும். இலங்கை மக்கள் நிலையான ஆட்சியைவிரும்புகிறார்கள். அதை ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே தர முடியும் என்றார்.

ஜனதா விமுக்தி பெருமுனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விமல் வீரவன்சா கூறுகையில், இந்தத் தேர்தலில் ஆளும்கட்சி, பிற கட்சிகளின் வெற்றிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது நேர்மையற்ற முறையிலோ மீண்டும்ஆட்சியைப் பிடிக்க நினைத்தால் நாங்கள் வரலாறு காணாத முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றுகூறியுள்ளார்.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா கூறுகையில், ஆளுங்கட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி,ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என்று நினைக்கிறது. இதற்காக தகவல் தொடர்பு சாதனங்களை தனக்குச் சாதகமாகப்பயன்படுத்திக் கொள்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, சன்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அதிபர் சந்திரிகா, எங்கள் கட்சியான மக்கள்கூட்டணிக்கு பொதுமக்கள் கடந்த 7 வருடங்களாக அங்கீகாரம் தந்துள்ளனர். எங்கள் கூட்டணிக்கு இந்த முறையும்வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த முறையும் மக்கள் எங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கைஎங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

58 பேர் சாவு:

தனியார் தேர்தல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், பொதுத்தேர்தலையொட்டி தலைநகர் கொழும்புஉள்பட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த 5 வாரங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது.பிரச்சாரத்தின்போது 58 படுகொலைச் சம்பவங்கள் நடந்தன. இதுதவிர நூற்றுக்கணக்கில் கொலை முயற்சி, தாக்குதல்சம்பவங்கள் போன்றவை நடந்துள்ளன என்று கூறியுள்ளனர்.

முன்னதாக, பொதுத்தேர்தலுக்காக 9,945 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டபோலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்காத வண்ணம்அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். ஆயுதங்களுடன் வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் மேல் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

மேலும், தேர்தல் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள செய்தியில், பொதுத்தேர்தலில் கள்ள ஓட்டுப்போட்டு யாரும் ஜெயிக்காத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த பகுதிகளான 6மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினரால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வண்ணம் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X